Monday,29th of October 2012
சென்னை:: தீபாவளி ரிலீஸ் படங்களில் இழுபறி நீடிப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீபாவளி கொண்டாட்டத்துக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் ரசிகர்களுக்கு விருந்தாக புதிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. பல படங்கள் திரைக்கு வரும் என்ற நிலை சில வாரங்களுக்கு முன் இருந்தது. ஆனால் இப்போது அதில் இழுபறி ஏற்பட்டிருக்கிறது. விஜய் நடித்துள்ள ‘துப்பாக்கி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. ஆனாலும் இப்படம் சம்பந்தமான சில பிரச்னைகள் பேசி தீர்க்கப்பட வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கிறார்.
பிரச்னைகள் சுமுகமாக தீர்க்கப்பட்டு தீபாவளிக்கு 3 தினத்துக்கு முன்னதாகவே இப்படம் ரிலீஸ் ஆகும் என்று பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிம்பு நடித்துள்ள ‘போடா போடி படமும் தீபாவளி ரிலீஸுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘கும்கி தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. தற்போது டிசம்பர் மாதத்துக்கு ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. விஷ்ணு, சுனேனா நடித்திருக்கும் ‘நீர்ப்பறவை தீபாவளி ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. ‘தீபாவளிக்கு எத்தனை படங்கள் ரிலீஸ் ஆகும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
2 பெரிய படங்கள் ஒரு சிறுபட்ஜெட் படம் ரிலீஸ் ஆனால் பொருத்தமாக இருக்கும். துப்பாக்கி, போடா போடி படத்துக்கு தியேட்டர்கள் புக் செய்யும் பணி தொடங்கிவிட்டது. தங்கர்பச்சான் இயக்கியுள்ள ‘அம்மாவின் கைபேசி படத்துக்கு தியேட்டர் புக் செய்யும் வேலை தொடங்கவில்லை. தியேட்டர்கள் கிடைக்கும் பட்சத்தில் மன்சூர் அலிகானின் ‘லொள்ளு தாதா பராக் பராக் படம் ரிலீஸ் ஆகலாம். இது தவிர இந்தியில் ஷாருக்கான் நடித்த யஷ் சோப்ராவின் ‘ஜப் தக் ஹே ஜான், அஜய் தேவ்கன் நடித்துள்ள ‘சன் ஆஃப் சர்தார் படங்களும் ரிலீஸ் ஆகிறது என்று தியேட்டர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ரஜினி, கமல், அஜீத் படங்கள் தீபாவளி ரிலீஸ் இல்லை.

Comments
Post a Comment