நடிகை தமன்னா நட்சத்திர ஓட்டலில் கேக் தயாரித்து அசத்தினார்!!!

Tuesday,30th of October 2012
சென்னை::நடிகை தமன்னா நட்சத்திர ஓட்டலில் கேக் தயாரித்து அசத்தினார். தெலுங்கு படங்களில் தமன்னா பிசியாக நடிக்கிறார். தற்போது ‘ஹிம்மத் வாலா‘ என்ற தெலுங்கு படத்துக்கும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் தெலுங்கில் நடித்த ‘கேமராமேன் கங்காதோ ராம்பாபு‘ படம் சமீபத்தில் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தமன்னா சமையலில் நிபுணத்துவம் பெற்றவர். வீட்டில் அவரே சமைப்பாராம்.

ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தமன்னாவை அழைத்து கேக் தயாரிக்க ஏற்பாடு செய்தனர். தமன்னா கேக் செய்வதற்கான மூலப்பொருட்களை பாத்திரத்தில் கலந்தார். சில நிமிடங்கள் கழித்து ருசியான கேக்கை தயாரித்து கொடுத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கேக்கை சாப்பிட்டு ருசி பிரமாதம் என்று பாராட்டினார்கள்.
27-7-12_findyour_INNER_468x60.gif

Comments