வெயிலோடு மல்லுக்கட்டிய ஸ்ருதி: படப்பிடிப்பு முடிந்ததும் சென்னைக்கு, "ஜூட் விட வேண்டியது தான் என்கிறார், ஸ்ருதி!!!

Tuesday,23rd of October 2012
சென்னை::தெலுங்கு திரை உலகை கலக்கி வரும் நடிகை ஸ்ருதி ஹாசன், பாலிவுட்டிலும், தன் கொடியை பறக்க விட்டுள்ளார். தமிழில் வெளியான "உனக்கும் எனக்கும் திரைப்படம், இந்தியில் "ரீ-மேக் ஆகிறது. தமிழில் த்ரிஷா நடித்த, கிராமத்து பெண் வேடத்தில், இந்தியில், ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இதன்படப்பிடிப்பு, புனே அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கிறது. வட கிழக்கு பருவமழை, சென்னையை குளிர்விக்கும் அதே நேரத்தில், புனேயில், வெயில் கொளுத்தி எடுக்கிறது. படப்பிடிப்பு குழுவினர், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வியர்வை வழிய படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்க, ஸ்ருதியோ, வெயிலை தாங்க முடியாமல் வாடி வதங்கி விட்டார். "பிரபு தேவா தலைமையிலான படப் பிடிப்பு குழுவினருடன் பணியாற்றுவது, புது அனுபவமாக உள்ளது. நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். ஆனால், இந்த வெயிலின் அவஸ்தையை தான் தாங்க முடியவில்லை. படப்பிடிப்பு முடிந்ததும் சென்னைக்கு, "ஜூட் விட வேண்டியது தான் என்கிறார், ஸ்ருதி.

Comments