கவியரசு கண்ணதாசன் விழா!!!

Friday,26th of October 2012
சென்னை::கண்ணதாசன்  விஸ்வநாதன் அறக்கட்டளை நடத்திய கவியரசு கண்ணதாசன் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள குமாரராஜா முத்தையா அரங்கில் நடந்தது. டாக்டர் குமாரராணி மீனா முத்தையா குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். விழா துவக்கத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் வரவேற்புரையாற்றினார். விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு ஏவி.எம்.சரவணன், டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், கிருஷ்ணாஸ் ஸ்வீட் எம்.முரளி ஆகியோர் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்கள். விருது பெறுபவர்களைப் பற்றிய அறிமுக உரையை டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் நிகழ்த்தினார்.  நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியன், பேராசிரியர் டாக்டர் சரஸ்வதி ராமநாதன், ஓவியக் கவிஞர் அமுதோன் (அமுதபாரதி) ஆகியோருக்கான கவியரசர் விருதுகளை வழங்கி கெளரவித்தார். சிறப்புரையை லேனா -தமிழ்வாணன், முனைவர் பர்வின் சுல்தானா வழங்கினர்.

Comments