Sunday,21st of October 2012
சென்னை::* அமீர் இயக்க, ஜெயம் ரவி நடிக்கும் ‘ஆதிபகவன்’ படத்துக்கு ஒரு இந்தி பாடல் படமாக்கப்பட்டது. இதில் பாலிவுட் நடிகை நீத்து சிங் நடனம் ஆடி இருக்கிறார்.
* அறிமுக இயக்குனர் சினேகாவின் ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் ஆடியோ விழாவில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி, திறமைசாலிகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு படங்களில் நடிக்கவும் வாய்ப்பளிக்கப்பட உள்ளது.
* இப்போதைய படங்களில் குத்துப்பாடல்கள் இடம்பெறுவது நல்ல மாற்றம். வரவேற்கத்தக்கது என்று குத்தாட்ட நடிகைகளுக்கு பூஸ்ட் கொடுத்திருக்கிறார் ஸ்ரீதேவி.
* நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றால் மறக்காமல் ஷாப்பிங் செய்துவிடுவாராம் வில்லன் நடிகர் சோனு சூட்.
மீண்டும் நடிக்க வந்திருக்கும் குட்டி ராதிகா இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா இயக்கும் புதிய படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். தெலுங்கு, கன்னடம் இரு மொழியில் படம் உருவாக உள்ளது.
‘சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்க உள்ள படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்க உள்ளார்.
‘பம்மல் கே சம்பந்தம், ‘பஞ்சதந்திரம் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதிய கிரேசி மோகனின் 60வது பிறந்த நாள் விழாவில் கமல்ஹாசன் பங்கேற்றார். ‘விஸ்வரூபம் ரிலீசுக்கு பிறகு புதிய படத்தில் கமல், கிரேசி இணைகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டாமலிருந்த ஆர்.பி.சவுத்ரி மீண்டும் தமிழ் படம் தயாரிக்க உள்ளார். விஜய் நடிக்கும் படத்தை தயாரிக்க பேச்சு நடக்கிறதாம்.
‘புதிய வார்ப்புகள், ‘முரட்டுக்காளை படங்களில் நடித்த ரதி அக்னோயோத்ரி இந்தி படங்களில் நடிக்க சென்று, ரிட்டயர்ட் ஆனார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் ‘டேராடூன் டைரி என்ற இந்தி படத்தில் அம்மா வேடத்தில் நடிக்கிறார். கோலிவுட்டுக்கு அவரை அழைத்து வரவும் சில இயக்குனர்கள் பேசி வருகிறார்களாம்.
பிரபுதேவாவின் இந்தி பட ஷூட்டிங் முடித்துக்கொண்டு அடுத்த மாதம் ஐதராபாத் திரும்பும் ஸ்ருதி ஹாசன் டோலிவுட்டில் ரவிதேஜா ஜோடியாக ‘பலுபு’ என்ற படத்தில் பங்கேற்கிறார். இதில் முதன்முறையாக காமெடி காட்சிகளில் நடிக்க உள்ளாராம்.
விக்ரமுடன் ‘கரிகாலன்’ படத்தில் நடிக்க பாலிவுட் நடிகை சரீன் கானிடம் பேச்சு நடந்தது. தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறதாம்.
‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ பட ரிலீஸுக்காக காத்திருக்கும் ‘கோ’ கார்த்திகா சமீபத்தில் அருண் விஜய்யுடன் ‘டீல்’ படத்தின் முதல்கட்ட ஷூட்டிங்கை தேனியில் முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.
அறிமுகப்படமான ‘கும்கி’ படத்தையடுத்து விக்ரம் பிரபு ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் விஜயதசமியன்று தொடங்குகிறது.
‘ஐ’ படத்தின் ஷூட்டிங் சீனாவில் 8 நகரங்களில் படமாக்க ஷங்கர் திட்டமிட்டிருந்தார். சில இடங்களில் அனுமதி கிடைக்காததால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் புதிய லொகேஷன் தேடிக் கொண்டிருக்கிறாராம்.
Comments
Post a Comment