மொராக்கோ நாட்டில் ஜீவா,ராதா மகள் துளசி நடிக்கும் தமிழ் பட ஷூட்டிங்!!!

Wednesday, 3rd of October 2012
சென்னை::ரவி கே.சந்திரன் இயக்கும் படத்தின் ஷூட்டிங் மொராக்கோ நாட்டில் நடக்க உள்ளது. ஜீவா, ராதா மகள் துளசி நடிக்கும் படம் ‘யான். இது பற்றி தயாரிப்பாளர்கள் எல்ரெட் குமார், ஜெயராம் கூறியதாவது: கவுதம் மேனன் இயக்கத்தில் எங்களது தயாரிப்பில் இருக்கும் ‘நீ தானே என் பொன் வசந்தம்Õ படத்தையடுத்து தயாராகும் ‘யான்Õ படத்திலும் ஜீவா ஹீரோவாக நடிக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் ‘கடல்Õ படத்தில் அறிமுகமாகும் துளசி ஹீரோயின். இவர் நடிக்கும் 2வது படம் இது. நாசர், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, பிரேம்ஜி அமரன், ஸ்ரீஹரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு தர வரிசையில் முன்னணியில் இருப்பவர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ரவி கே.சந்திரன் இப்படத்தின் கதை அமைத்து முதல்முறையாக இயக்குகிறார். இனிமையான இசையை ஹாரிஸ் ஜெயராஜ் அமைக்கிறார். தேசிய விருது பெற்ற சாபு சிரில் அரங்கம் நிர்மாணிக்கிறார். ‘ஸ்லம் டாக் மில்லினர்Õ படத்தின் ஒலிப்பதிவுக்காக ஆஸ்கர் விருது வென்ற ரெசூல் பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார். சென்னை, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களை தவிர இதுவரை படமாக்கப்படாத தொன்மையான மொராக்கோ நாட்டின் முக்கிய பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments