சுஜிபாலா சம்மதம் இல்லாமலேயே திருமணம் ரத்து: இயக்குனர் மீது சுஜிபாலா குடும்பத்தினர் ஆவேசம்!!!

Tuesday, 9th of October 2012
சென்னை::நடிகை சுஜிபாலா ‘சந்திரமுகி’,  ‘அய்யாவழி’, ‘முத்துக்கு முத்தாக’, ‘கிச்சா வயசு 16’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது காஞ்சீபுரத்தை சேர்ந்த புதுமுக இயக்குனர் பி.ரவிக்குமார் டைரக்டு செய்யும் ‘உண்மை’ என்ற படத்தில் கதாநாயகியாக  நடித்து வருகிறார்.

ரவிக்குமார் ஏற்கனவே ‘பழி’, ‘தடயங்கள்’, ‘பதுமை’, ‘வினை அறுப்பான்’ போன்ற படங்களை தயாரித்து உள்ளார். ‘உண்மை’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது சுஜிபாலாவுக்கும், ரவிக்குமாருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செயது கொள்ள முடிவெடுத்தனர். இருவருடைய பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்கள்.

இதையடுத்து  நாகர்கோவில் அருகே உள்ள கொய்யன்விளையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. கவர்ச்சி நடிகைகள் பாபிலோனா, கும்தாஜ், அல்போன்சா உள்ளிட்டோர் அதில் பங்கேற்று இருவரையும் வாழ்த்தினர்.

நிச்சயதார்த்தம் முடிந்து சில வாரங்கள் கழித்து சுஜிபாலா அதிக தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்றார். ஆனால், டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றினர். திருமணத்துக்கு ரவிக்குமார் மறுத்ததால் சாகத் துணிந்ததாக தகவல் வெளியானது. ஆனால், சுஜிபாலா இதனை மறுத்தார்.

ரவிக்குமாருக்கும், எனக்கும் நிச்சயிக்கப்பட்டபடி அக்டோபரில் திருமணம் நடைபெறும் என்று அறிவித்தார். தற்கொலைக்கு நான் ஒருபோதும் முயற்சிக்கவில்லை என்றும், திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் இயக்குனர் ரவிக்குமார் திடீரென திருமணம் ரத்தாகி விட்டதாக அறிவித்து உள்ளார். சுஜிபாலாவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது உண்மைதான் என்றும், தற்போது இருவரும் பிரிகிறோம் என்றும் கூறியுள்ளார்.

திருணம் ரத்தான செய்தி கேட்டு நடிகை சுஜிபாலா அதிர்ச்சியாகியுள்ளார். அவருடைய செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இவர் தற்போது எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை. சுஜிபாலா சம்மதம் இல்லாமலேயே திருமணத்தை ரவிக்குமார் ரத்து செய்து விட்டதாகவும் இதை எதிர்த்து போலீஸ், கோர்ட்டு என போவோம் என்று குடும்பத்தினர் ஆவேசப்பட்டனர்.

Comments