Tuesday,2nd of October 2012
சென்னை::இணைஞ்சு நடிக்க நாங்க தயார் என்று இளம் ஹீரோக்கள் சொன்னாலும் அப்படியொரு ஸ்கிரிப்டை இதுவரை யாரும் அவர்கள் கண்ணில் காட்டவில்லை. ஜீவாவும், ஜெயம் ரவியும் ஜனநாதன் படத்தில் நடிக்கிறார்கள் என்று தகவல் வந்தது. ஸ்டார்ட் கட் சொல்லக் காணோம். இந்த விஷயத்தில் சுந்தர் சி. சூப்பர் ஃபாஸ்ட். கதையே சொல்லிவிட்டாராம்.
விஷாலை வைத்து மதகஜராஜா படத்தை இயக்கி வருகிறவர் விஷால், ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா ஆகியோரின் அன்யோன்ய நட்பை அருகிலிருந்து பார்த்திருப்பார் போலிருக்கிறது. நான்கு பேரும் சேர்ந்து நடிக்கிற கதையொன்றை உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லியிருப்பதாக கேள்வி. அவர்களும் ஓகே என்று தலையசையித்திருப்பதாக பாஸிடிவ் செய்தி வந்திருக்கிறது.
சந்தானத்தை இதில் வில்லனாக - சிரிப்பு வில்லன்தான் - நடிக்க வைக்கப் போகிறாராம்.
எப்படி கல்லா கட்டுறதுங்கிறதை சுந்தர் சி. கிட்டதான் கத்துக்கணும்.
Comments
Post a Comment