Friday,19th of October 2012
சென்னை::முன்னாள் வெள்ளிவிழா நாயகன் என்று திருத்தி வாசிக்கவும். இரண்டு படங்களில் நடிக்கிறார், மலையாள பியூட்டிஃபுல் படத்தை தமிழ் உள்பட மூன்று மொழிகளில் தயாரிக்கிறார் என்று சமீபமாக மோகனின் பெயர் மீடியாவில் அடிபடத் தொடங்கியிருக்கிறது. இருந்தாலும் விழாவுக்கு அழைப்பார்களே தவிர மேடையேற்றி முதல் மரியாதை தந்தது இயக்குனர் சுசீந்திரன்தான்.
இவரின் ஆதலால் காதல் செய்வீர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் காம்ப்ளக்ஸில் நடந்தது. முதல் இசைத்தகடை வெளியிட்டவர் மோகன். பாக்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் பிரான்சிஸ் கிருபா, வாலி, யுகபாரதி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். ரவி.கே.சந்திரன், ராஜீவ் மேனன், கரு.பழனியப்பன், பிரபுசாலமன், அமீர், ராஜேஷ் எம்., வெற்றிமாறன், சமுத்திரக்கனி, சசிகுமார் என ஒரு பெரிய டீமே விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசியது.
கறுப்பு சட்டை, நீல ஜீன்ஸ், கருப்பு கண்ணாடி என்று (கருகரு தலைமுடி மட்டும் கலரிங்) பார்க்க பந்தாவாகதான் இருக்கிறார் வெள்ளிவிழா நாயகன். இன்னொரு ரவுண்ட் ஹீரோவாக முயற்சிக்கலாமே பாஸ்.
Comments
Post a Comment