சிக்கலில் சின்ன சூப்பர் ஸ்டார்!!!

Friday,26th of October 2012
சென்னை::சின்ன சூப்பர் ஸ்டாரின் எந்தப் படம் வெளியானாலும் சென்னை சிட்டி ரைட்ஸை மட்டும் சி.சூப்பரின் தந்தைக்குலம் தட்டிப் பறித்துவிடுவார். சூப்பரை ஒப்பந்தம் செய்யும் போதே சிட்டி ரைட்ஸும் சேர்த்து வாங்கப்படும்.

சிட்டியில் ஏதாவது ஒரு மொக்கை தியேட்டரில் பணம் கொடுத்து படத்தை ஓட்டி நூறு நாள் போஸ்டர் ஒட்டுவது தந்தைக்குலத்தின் காஸ்ட்லி பொழுதுபோக்கு.

உசத்தியான படத்தின் போது இந்த விளையாட்டை தமிழக அளவில் விளையாடியதில் எட்டு கோடி ரூபாய் அளவுக்கு தந்தைக்குலம் தயாரிப்பாளருக்கு செட்டில் செய்ய வேண்டுமாம்.

அதை செட்டில் செய்யாவிடில் போடாவாவது போடியாவது எதையும் வெளியிட மாட்டோம் என்று எதிர்ப்பு கிளம்பியிருப்பதாக கேள்வி.

முடியை கட்டி மலையை இழுக்கும் தந்தைக்குலத்துக்கு இதெல்லாம் ரொம்ப சாதாரணமப்பா

Comments