Tuesday,30th of October 2012
சென்னை::வெங்கட்பிரபுவின் பிரியாணி படத்தில் ஹீரோயின் யார் என்பதில் ஏற்பட்ட மோதலில் ரிச்சா கங்கோபாத்யாய் வெளியேறினார். வெங்கட்பிரபு இயக்கும் படம் ‘பிரியாணி. கார்த்தி ஹீரோ. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் ரிச்சா கங்கோபாத்யாயிடம் வெங்கட் பிரபு பேசி வந்தார். ஆனால் அவரை ஒப்பந்தம் செய்யாமல் காலம் கடத்தி வந்தார். இந்தநிலையில் வேறு ஹீரோயின்களுடனும் வெங்கட் பிரபு பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். சமீபத்தில் ஹன்சிகாவிடம் கதை சொன்னார். அவருக்கு பிடித்துவிடவே நடிக்க ஒப்புக்கொண்டார். மற்றொரு ஹீரோயினாக ரிச்சா நடிப்பார் என்று தகவல் வெளியானது. ஆனால் இதை அவர் ஏற்கவில்லை.
இதையடுத்து ஹீரோயின் யார் என்பதை முடிவு செய்யும்படி இயக்குனரிடம் வாக்குவாதம் செய்தாராம். அவரை இயக்குனர் சமாதானம் செய்தார். ‘படத்தில் 2 ஹீரோயின்கள் இருப்பதால் உங்களது கதாபாத்திரம் சற்று மாற்றங்களுடன் இடம்பெறுகிறது என்று விளக்கினார். ஆனால் அதை ரிச்சா ஏற்கவில்லை. இதையடுத்து படத்திலிருந்து வெளியேற முடிவு செய்தார். இதுபற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ரிச்சா, ‘என்னுடைய கதாபாத்திரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை ஏற்க முடியவில்லை. எனவே படத்திலிருந்து வெளியேறிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். அதே நேரம், சம்பள பிரச்னையால்தான் ரிச்சா விலகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தில் மற்றொரு ஹீரோயினாக நீது சந்திரா நடிப்பார் என தெரிகிறது.

Comments
Post a Comment