Monday,1st of October 2012
சென்னை::காஜல்அகர்வால் இந்தி,தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-
நடிகர், நடிகைகள் சினிமாவில் கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள். எதுவும் சும்மா வந்து விடாது. நான் கஷ்டப்படுவதால் அதற்குரிய பலனை எதிர்பார்க்கிறேன். எவ்வளவு கஷ்டப்படுகிறேனோ அதற்கு இரட்டிப்பு பலன் வேண்டும். சம்பளத்துக்கும் அது பொருந்தும். ரசிகர்களின் பாராட்டையும் இரு மடங்கு எதிர்பார்க்கிறேன்.
தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். இந்தியிலும் ஒரு படம் கைவசம் உள்ளது. சில படங்கள் வேகமாக முடிந்து விடும். எப்போது படப்பிடிப்பு துவங்கியது. எவ்வளவு நாள் முடிந்தது என்பதே தெரியாது. ஆனால் சில படங்களில் உடம்பை வருத்தி நடிக்க வேண்டி இருக்கும். அவை நன்றாக ஓடும்போது பட்ட கஷ்டமெல்லாம் பறந்து போகும்.
எந்த மாதிரி படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்கிறார்கள். ரசிகர்கள் எப்படிப்பட்ட கதைகளை விரும்புகிறார்களோ அந்த படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். இந்த காலத்து இளைஞர் மனதில் இடம் பிடிக்கும் கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Post a Comment