Sunday,21st of October 2012
சென்னை::இயக்குனர், எடிட்டருக்கு அடுத்து துப்பாக்கியின் அனைத்து பிரேம்களையும் - படமாகப் பார்த்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். படத்தின் முதல் பகுதிக்கு பின்னணி இசையமைத்த பின் அவர் அடித்த கமெண்ட், மாற்றானைவிட துப்பாக்கியின் காதல் காட்சிகள் நன்றாக இருக்கிறது.
இன்னும் இரண்டொரு தினங்களில் மொத்தப் படத்திற்கான பின்னணி இசை சேர்ப்பும் முடிந்துவிடும். இந்நிலையில் துப்பாக்கி சிறப்பாக இருப்பதாகவும், கண்டிப்பாக படம் வெற்றி பெறும் என்றும் ஹாரிஸ் சொன்னதாக அவரது கூடாரத்திலிருந்து குதூகல செய்தி கசிந்திருக்கிறது.
தொடர்ந்து சுமாரான படங்கள் தரும் விஜயக்கு புது உற்சாகமாகவும், 7 ஆம் அறிவு ஏமாற்றத்துக்கு மருந்தாக முருகதாஸுக்கும் துப்பாக்கி அமையும் என்பது ஹாரிஸின் வார்த்தையிலிருந்து கிடைத்திருக்கும் நம்பிக்கை.
மும்பை தமிழனாக ராணுவ வீரராக வருகிறார் விஜய். ஆக்சனுக்கு பஞ்சமில்லாதது போலவே காதலுக்கும் காஜல் இருக்கிறார். இந்த வருடம் வந்த பிரமாண்டப் படங்கள் காலை வாரிய நிலையில் துப்பாக்கி அதனை மாற்றி எழுதும் என நம்ப அதிக சாத்தியமுள்ளது.
Comments
Post a Comment