Saturday,13th of October 2012
சென்னை::ஆக்சன் கிங் அர்ஜுன் ஐம்பதை தாண்டிய வயதிலும் ஜம்மென்று முப்பத்தைந்து எஃபெக்ட் காட்டிக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் ஐயாவின் மூவ் இருபதை ஞாபகப்படுத்தும். இந்தக் கதையெல்லாம் எதற்கு என்கிறீர்களா... அர்ஜுனின் மகளுக்கு இப்போது வயது 21. ஐஸ்வர்யா என்று நாமகரணம் சூடப்பட்ட அர்ஜுனின் டீன்ஏஜ் தேவதையும் விரைவில் திரையுலகில் பிரவேசிக்கிறார்.
துளசி மாதிரியே ஐஸின் புகைப்படம்கூட யாரும் இதுவரை பார்த்ததில்லை. அதனால் என்ன ஆக்சன் கிங்-ன் மகள் என்பதால் ஆரத்தி தட்டு எடுக்க இன்டஸ்ட்ரியில் அடிபிடி. அதிகமும் பூபதி பாண்டியன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தில் ஐஸ்வர்யாவின் அறிமுகம் இருக்கலாம் என்கிறார்கள். யூகம்தான், உறுதியில்லை.
விஷால், பூபதி பாண்டியன் இணைகிறார்கள் என்று சிந்துபாத் கதை மாதிரி சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். பட்டத்து யானை என்று பெயரும்கூட ரெடி. இணைவதில்தான் என்னவோ சிக்கல். பூபதி பாண்டியன் சமந்தா வழியில் மாந்த்ரிகத்தை நாடினால் நல்லது என்பது நமது அபிப்ராயம்.
Comments
Post a Comment