இந்தி ‌ரீமேக்கில் பிரசாந்த்?!!!

Wednesday,24th of October 2012
சென்னை::மம்பட்டியான் படத்துக்குப் பிறகு பிரசாந்தே பெ‌ரிய கேள்விக்குறியாகிவிட்டார். பாலுமகேந்திரா, ஷங்கர், மணிரத்னம் என்று முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்த ஒரே நடிகர் - கமலுக்குப் பிறகு இவராகதான் இருப்பார். என்ன இருந்தென்ன... பிரசாந்தின் அடுத்தப் படம் எது என்று யாருக்கும் தெ‌ரியாது.

அதற்காக அப்படியே விட்டுவிட முடியாதில்லையா. தோண்டி துருவியதில் இந்தி படமொன்றின் ‌ரீமேக்கில் நடிக்க தீவிரமாக இருக்கிறாராம். இதைத் தவிர வேறு எந்த கமிட்மெண்டும் இருப்பதாக‌த் தெ‌ரியவில்லை. கதை சொல்றேன் என்று வழி தவறி சென்றவர்களைகூட தியாகராஜன் பெ‌ரிய கும்பிடாகப் போட்டு திருப்பி அனுப்பியதாக‌க் கேள்வி.

அந்த இந்திப் படம் நடனத்தை மையமாகக் கொண்டதாக கேள்வி. பெயர் யாருக்காவது தெ‌ரியுமாப்பா?

Comments