Friday,5th of October 2012
சென்னை::இசை ஆல்பத்திற்காக அனுஷ்காவுடன் டான்ஸ் ஆடுகிறீர்களா என கேட்டதற்கு பதில் அளித்தார் கார்த்தி. படங்களில் நடிப்பதுபோக இசை ஆல்பங்கள் உருவாக்குவதில் கோலிவுட் ஹீரோக்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர். தனுஷ், சிம்புவை தொடர்ந்து தற்போது கார்த்தி இந்த பணியில் ஈடுபட்டிருக்கிறார். ‘அலெக்ஸ் பாண்டியன்Õ படத்தில் பேட் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கார்த்தி அந்த கதாபாத்திரத்தின் பெயரை தலைப்பாக வைத்து இசை ஆல்பம் உருவாக்குகிறார். இது பற்றி அவர் கூறும்போது, ‘Ôஇது என்னுடைய முதல் முயற்சி. உண்மையிலேயே த்ரில்லாக இருக்கிறது. இது அலெக்ஸ் பாண்டியன் படத்தை பிரபலப்படுத்துவதற்கான ஆல்பம். இதுவொரு புது அனுபவமாக எனக்கு இருக்கும். மேற்கத்திய பாடகர்கள் அணிவதுபோல் ஸ்டைலான உடைகள் அணிந்து இதில் ஆடப்போகிறேன். எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்துகொள்ளுங்கள். தேவி ஸ்ரீபிரசாத்துடன் இணைந்து நடன இயக்குனர் ராபர்ட் இதனை வடிவமைக்கிறார். இதில் அனுஷ்கா என்னுடன் சேர்ந்து ஆடுவார்களா என்கிறார்கள். இல்லை தேவி ஸ்ரீபிரசாத் என்னுடன் ஆடுவார். அதற்கான பேச்சு நடக்கிறது என்றார்.
Comments
Post a Comment