மீண்டும் சேரன் படத்தில் சினேகா!!!

Monday,22nd of October 2012
சென்னை::சேரனின் ஆட்டோகிராஃப் படத்தில் நடித்த சினேகா மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கிறார்.

பொக்கிஷத்தின் ‌ரிசல்டில் ஆடிப்போன சேரன் பல ஆடி மாதங்களை‌க் கடந்து இப்போதுதான் ஆக்சன் கட் சொல்லும் தைரியத்தை பெற்றிருக்கிறார். இந்தமுறையும் உணர்ச்சிகளை முறுக்கிப் பிழிவார் என்றுதான் படத்தின் பெயரை கேட்கும் போது தோன்றுகிறது. ஜேகே என்றொரு நண்பனின் கதை (அல்லது வாழ்க்கை?)

சர்வானந்த், இனியா நடிக்கும் இந்தப் படத்தில் இப்போது புதிதாக சினேகாவும் சேர்ந்திருக்கிறார். கல்ணாயம் ஆன பிறகும் சினேகாவின் ஸ்டார் வேல்யூ குறையவில்லை. பலரும் அவரைத் தேடி வருகிறார்கள், கால்ஷீட்டுக்குதான்.

தற்போது ஹ‌ரிதாஸ், சேரன் படம் என இரு படங்கள் சினேகா கைவசம் உள்ளது.

Comments