Friday,19th of October 2012
சென்னை::வாய்ப்பு கேட்டு கெஞ்சும் பழக்கம் என்னிடம் இல்லாததால் அதிக படங்களில் நடிக்கவில்லை என்றார் கமாலினி முகர்ஜி. ‘வேட்டையாடு விளையாடு’, ‘காதல்னா சும்மா இல்ல’ படங்களில் நடித்த கமாலினி முகர்ஜி கூறியதாவது: கோலிவுட்டில் இரண்டு படங்களில் நடித்தேன். டோலிவுட்டில் நிறைய படங்களில் நடித்து வந்தேன். மலையாளத்தில் ‘நேதோலி செரியா மீன் அல்ல’ படத்தில் நடிக்கிறேன். இது பன்முகம் கொண்ட கதாபாத்திரம். சமீபத்தில் டோலிவுட்டில் ‘ஷிருடி சாய்’ படத்தில் நாகார்ஜூனாவுடன் நடித்தேன்.
ஷிருடி பக்தையான நான் இதில் நடித்தது மகிழ்ச்சி. ஒரு நடிகையாக என்னை பிரபலப்படுத்திக் கொள்ளாமல் அடக்கியே வாசித்தேன். எனக்கு மேனேஜர்கள் கிடையாது. வாய்ப்பு வேண்டும் என்று கேட்டு யாரிடமும் கெஞ்சியதில்லை. முந்தைய படங்களில் நடித்ததை வைத்தே அடுத்தடுத்த படங்கள் எனக்கு வந்திருக்கின்றன. நான் வங்காளப் பெண். ஆனாலும் நடிகையாகி 7 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் வங்காள மொழிப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது.
இந்தியில் ரேவதி இயக்கிய ‘பிர் மிலிங்கே’ என்ற படம் மூலம் அறிமுகமானேன். ஒரு நடிகையாக தென்னிந்திய படங்கள்தான் என்னை பிஸியாக வைத்திருக்கிறது. ‘வெவ்வேறு மொழிகளில் நடிப்பது கஷ்டமா?’ என்கிறார்கள். அது எனக்கு கடினமாக தெரியவில்லை. அதை சவாலாக எடுத்துக்கொண்டேன். விரைவில் வங்காள மொழிப் படம் ஒன்றை இயக்க உள்ளேன். இவ்வாறு கமாலினி முகர்ஜி கூறினார்.

Comments
Post a Comment