துப்பாக்கி, மாற்றான் - ‌ரிசல்டை கசியவிட்ட இசையமைப்பாளர்!!!

Wednesday,10th of October 2012
சென்னை::ஒரு படம் வெளியாவதற்கு முன்பே படம் எப்படி என்று ‌ரிசல்டை தெ‌ரிந்து கொள்ள அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். அதுவும் ஸ்டார் படம் என்றால் ஆர்வம் தாறுமாறாக ஓடும்.

விஜய்க்கு கடைசியாக வெளியானது - நண்பன் சேர்த்தி இல்ல - வேலாயுதம். சூர்யாவுக்கு 7ஆம் அறிவு. ஒரே நேரத்தில் வெளியான இந்தப் படங்களில் எது பெஸ்ட் என்ற சர்ச்சை இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. துப்பாக்கியும், மாற்றானும் ஒரே நேரத்தில் வெளியாகப் போவதில்லை என்றாலும் எது வெல்லும் என்று பெட் கட்டுகிறவர்கள் நிறைய. ஏற்கனவே சூர்யா ரசிகர் முருகதாஸை கலாய்க்க, முருகதாஸ் பாப்பா தள்ளி போய் விளையாடு என பதிலுக்கு கலாய்க்க... ஏ‌ரியாவெங்கும் ஒரே கதகதப்பு.


ச‌ரி, எந்தப் படம் நன்றாக இருக்கிறது துப்பாக்கியா இல்லை மாற்றானா?

இன்றைய தேதியில் இந்த இரு படங்களையும் பார்த்த ஒரே நபர் ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ். இரண்டுப் படங்களுக்கும் இவர்தான் இசை. அதிலும் துப்பாக்கியின் இடைவேளைவரைதான் பின்னணி இசை சேர்த்திருக்கிறாராம். பார்த்தவரைக்கும் ‌ரிசல்ட் என்ன?

மாற்றானைவிட துப்பாக்கி பெஸ்ட் என்பதே ஹாரிஸின் கூடாரத்திலிருந்து கசிந்திருக்கும் செய்தி. குறிப்பாக துப்பாக்கி காதல் காட்சிகள் அருமையாக உள்ளனவாம். ஆக்சன் காட்சிகளும் அப்படியே. இதற்கு அர்த்தம் மாற்றான் மட்டம் என்பதல்ல, இரண்டில் துப்பாக்கி பெஸ்ட், அவ்வளவே.

கிடைத்திருக்கும் தகவல்களை வைத்துப் பார்த்தால் துப்பாக்கி விஜய்யின் இரண்டாவது கில்லி. தளபதிக்கு நேரம் தெ‌ளிஞ்சிடுச்சி.

Comments