Monday,15th of October 2012
சென்னை::விஸ்வரூபம் ஆடியோ ரிலீசுக்காக தனி விமானத்தை வாடகைக்கு எடுத்தார் கமல்ஹாசன். கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்துள்ள படம் ‘விஸ்வரூபம்Õ. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்தது. இதன் இசை வெளியீட்டு விழாவை வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்டிருக்கிறார் கமல். தமிழ்நாட்டில் 3 முக்கிய நகரங்களில் ஒரே நேரத்தில் விழா நடக்க உள்ளது. அதில் பங்கேற்பதற்காக தனி விமானத்தை வாடகைக்கு எடுத்துள்ளார்.
இது பற்றி அவரது தரப்பில் கூறும்போது, ‘தமிழ்நாட்டில் 3 நகரங்களில் விஸ்வரூபம் ஆடியோ வெளியிடப்படுகிறது. ஒரே நேரத்தில் இந்நிகழ்ச்சி நடக்க உள்ளதால் அதில் பங்கேற்பதற்கு வசதியாக தன¤ விமானம் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் இதில் கலந்துகொள்கின்றனர். முதலில் மதுரையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கமல் பிறகு கோவையில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
முடிவில் சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். எந்த இடத்தில் விழா நடத்துவது, யாரை சிறப்பு அழைப்பாளராக அழைப்பது என்பது பற்றி ஆலோசித்து வருகிறோம். இப்படத்துக்கு பாலிவுட் இசை அமைப்பாளர்கள் சங்கர் எஹசான் லாய் இசை அமைத்திருக்கின்றனர். பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்றனர். நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசன் பிறந்தநாள் அந்த நாளில் ஆடியோ ரிலீஸ் நடக்கும் என்று தெரிகிறது.

Comments
Post a Comment