நடிப்புக்கு முழுக்கா? லேகா பேட்டி!!!

Tuesday,30th of October 2012
சென்னை::நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டீர்களா? என்றதற்கு பதில் அளித்தார் லேகா வாஷிங்டன். ‘ஜெயம் கொண்டான், வா படங்களில் நடித்தவர் லேகா  வாஷிங்டன். அந்த படங்களுக்கு பிறகு அவரை காணவில்லை. இது குறித்து அவர் கூறும்போது, ‘அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப்  டிசைனிங் கல்லூரியில் படிப்பை முடித்தேன். அதன்பிறகுதான் நடிக்க வந்தேன். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தலா ஒரு படம் நடித்து  வருகிறேன். நடிப்பை தவிர்த்து டிசைனிங் தொழிலில் எனக்கு ஆர்வம் அதிகம். எனவே அதற்கான பணியில் கவனம் செலுத்துகிறேன்.

சமீபத்தில் இப்பணிக்காக விருதும் பெற்றேன். டிசைனிங், நடிப்பு இரண்டையும் சமமாக மதிக்கிறேன். டிசைனிங் தொழிலில் எனது ஆதிக்கம்தான் இருக்கும்.  நடிப்பை பொறுத்தவரை மற்றவரின் எண்ணப்படித்தான் நடிக்க முடியும். அமிதாப்பச்சனுடன் ஒரு படத்தில் நடித்தேன். அது மறக்க முடியாத அனுபவம். எனது  பெரும்பாலான நேரத்தை பேஸ்புக், டுவிட்டரில் கழிப்பதுடன் நிறைய சினிமா பார்க்கிறேன். இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை.  நடிப்பிலும், டிசைனிங்கிலும் நிறைய சாதிக்க எண்ணி உள்ளேன் என்றார்.

Comments