கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Thursday,4th of October 2012
சென்னை::அஜீத் நடிக்க ‘சிறுத்தைÕ சிவா இயக்கும் படத்துக்கு ‘வெற்றி கொண்டான்‘ என்று தலைப்பு வைக்கப்படுகிறதாம். ஆனால் டைட்டில் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் இயக்குனர்.


நான் படத்தில் சலீம் என்ற கேரக்டர் மூலம் நடிகராக அறிமுகமான இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி தான் நடிக்கும் அடுத்த படத்துக்கு ‘சலீம்Õ என டைட்டில் வைத்திருக்கிறார். இதுதவிர ‘திருடன்Õ என்ற படத்திலும் நடிக்கிறார்.

நான் ஈ பட இயக்குனர் ராஜ மவுலி இயக்கும் படத்தில் நடிப்பதற்காக தனது திருமணத்தை தள்ளி வைத்திருக்கிறார் டோலிவுட் ஹீரோ பிரபாஸ்.

சிவாஜி, ஒய்.ஜி.மகேந்திரன் நடித்த ‘பரீட்சைக்கு நேரமாச்சுÕ படம் மீண்டும் ரீமேக் ஆகிறது. சிவாஜி நடித்த வேடத்தில் ஒய்.ஜி.மகேந்திரனும், ஒய்.ஜி.மகேந்திரன் நடித்த வேடத்தில் சந்தானமும் நடிக்கின்றனர்.

மறைந்த நடிகர் திலகன், கடைசியாக ‘அன்னும் இன்னும் என்னும்Õ என்ற மலையாள படத்தில் நடித்தார். விரைவில் வெளிவரவுள்ள இப்படத்தில் அவர் காமெடி வேடத்தில் நடித்திருக்கிறார்.

Comments