கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Wednesday,31st of October 2012
சென்னை::விஜய் படத்தை இயக்க உள்ள ‘கிரீடம்’ விஜய் சமீபத்தில் நியூசிலாந்து. ஆஸ்திரேலியா சென்று லொகேஷன் தேர்வு செய்துவிட்டு திரும்பினார்.

புது இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கும் ‘ஏப்ரல் ஃபூல்’ படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார் பூமிகா.

‘முகமூடி’, ‘ஆரோகணம்’ படத்துக்கு இசை அமைத்த கே மலையாளத்தில் ‘அன்னாயும் ரசூலும்’ படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.

நயன்பத்ரி இயக்கும் ‘பில்லியன் டாலர் ராஜா’ ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் மோகன்லால்.

நடிப்பு, நடன திறமையை அடக்கி வைத்துக்கொண்டு இயக்குனராக பணியாற்றும் பிரபுதேவாவின் தன்னடக்கத்துக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார் பாலிவுட் ஹீரோ சல்மான் கான்.

ரவி கே. சந்திரன் இயக்கும் ‘யான்’ படத்தில் மும்பை தெற்கு பகுதியில் வாழும் இளைஞனாக ஜீவா நடிக்கிறார். இவருக்கான காஸ்டியூம் டிசைனை ‘அக்னிபத்’

பாலிவுட் படத்துக்கு காஸ்டியூம் டிசைன் அமைத்த மந்திரா சுக்லா செய்கிறார்.

பேஷன் போட்டோகிராபர் இயக்கும் மலையாள படமொன்றிற்காக ஹீரோயின் காவ்யா மாதவன் முதன்முறையாக சொந்த குரலில் பாட்டு பாடினார்.

ஜெயம் ராஜா உதவியாளர் நேசன் இயக்கத்தில் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் விஜய். இப்படத்துக்கு டி.இமான் இசை அமைக்க உள்ளார்.

‘நான் ஈ’ பட ஹீரோ நானி நீண்ட நாள் காதலி அஞ்சனாவை மணந்தார். இவர்களின் திருமணம் டிசம்பர் மாதம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால், முன்னதாகவே

இவர்கள் திருமணம் நடந்தது. ராணா உள்ளிட்ட சில நடிகர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்டனர்.

நிமிர்ந்து நில் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி அடுத்து புனித் ராஜ்குமார் நடிக்கும் கன்னட படத்தை இயக்குகிறார். இது இவர் இயக்கும் 2வது கன்னட படம்.

கவுதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடித்துள்ள ‘நீ தானே என் பொன்வசந்தம் டிசம்பர் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

பாலிவுட் நடிகை அங்கிதாவுடன் பிரகாஷ் ராஜ் நடித்த குத்து பாடல் காட்சி ‘துள்ளி விளையாடு படத்துக்காக படமாக்கப்பட்டது.

சென்னை வளசரவாக்கம் பகுதியில் கட்டப்பட்டுள்ள சாய் பாபா கோயிலுக்கு சமீபத்தில் சென்ற அஜீத், சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார்.

புதுச்சேரி கடல் பகுதியில் ஆங்கில படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடித்த ஆஸ்கர் விருது இயக்குனர் அங் லீ, நவம்பர் இறுதியில் தனது புதிய படத்தின் புரமோஷனுக்காக சென்னை, மும்பைக்கு வருகிறார்.

Comments