எந்திரன் படத்தில் ரோபோ ரஜினி கண்ணாடி அணிந்ததன் ரகசியம்!!!

Sunday,21st of October 2012
சென்னை::எந்திரன் படத்தில் ரோபோ ரஜினி எப்போதுமே கண்ணாடி அணிந்து நடித்தன் காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

ஏதோ விஞ்ஞானியான வசியையும், ரோபோ கதாப்பாத்திரமான சிட்டியையும் வேறுபடுத்திக் காட்ட ஷங்கர் செய்த வியூகம் இது என்று நாம் நினைத்திருந்தோம். ஆனால் அது விஷூவல் கிராபிக்ஸ்க்கு ஆகும் செலவை பன்மடங்கு குறைக்க எடுத்த முடிவு என்று இப்போதுதான் தெரிய வந்துள்ளது.

எந்திரன் படத்தில் விஷூவல் எபெக்ட்டுக்காக திட்டமிடப்பட்டிருந்தது ரூ.70 கோடி. ஆனால், மூன்றே மூன்று விஷயங்களைக் கடைபிடித்து விஷூவல் எபெக்ட்டுக்கான செலவை ரூ.20 கோடியாக குறைத்துள்ளார் விஷூவல் எபெக்ட் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாஸ் மோகன்.

விஷூவல் எபெக்டில் கண்களின் அசைவை துல்லியமாகக் கொண்டு வர நீண்ட நேரம் ஆகும். எனவேதான், ஷங்கரிடம் பேசி, ரோபோ ரஜினிகாந்த்தின் உடலில் மூன்று விதமான மாற்றங்களை செய்ய ஆலோசனை கூறினேன்.

முதலில் எப்போதுமே கூலிங் கிளாஸ் அணிந்து தோன்றுவது. இதனால் கண்களின் அசைவை உருவாக்க அதிக நேரம் செலவிடத் தேவையில்லை.

பிறகு அதிகமாக அசையும் தலை முடியை ஒருபோல குட்டையாகக் காண்பிப்பது, லெதர் ஆடை அணிவது போன்றவை கடைபிடிக்கப்பட்டதாகவும், இதனால் 70 கோடி ரூபாயில் இருந்து 20 கோடி ரூபாயாக விஷூவல் எபெக்ட்டுக்கான செலவு குறைக்கப்பட்டதாகவும் ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார்.

இப்போது புரிகிறதா கண்ணாடிக்கு பின்னாடி என்ன இருந்தது என்று?

Comments