Saturday,13th of October 2012
சென்னை::அஞ்சலிக்கு சென்னையில் இதுவரை சொந்த வீடு இல்லை. வாடகைதான். முதல்முறையாக வளசரவாக்கத்தில் சொந்தமாக வீடு வாங்கி குடியேறிய நேரம் தமிழில் படங்களின் வரத்தில் திடீர் தட்டுப்பாடு. அதேநேரம் தாய் மொழியான சுந்தரத் தெலுங்கில் கூப்பிட்டு வாய்ப்பு தருகிறார்கள்.
மகேஷ்பாபு, வெங்கடேஷ் நடிக்கும் படத்தில் வெங்கடேஷின் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற போது நயன்தாரா, அனுஷ்கா போன்ற முன்னணி நடிகைகள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடினார்கள். குறிப்பிட்ட படத்தில் மகேஷ்பாபுவின் அண்ணன் வெங்கடேஷ். வெங்கடேஷின் ஜோடி என்றால் மகேஷ்பாபுக்கு அண்ணி. எப்படி நடிப்பார்கள்?
அஞ்சலி மகேஷ்பாபுவின் ஜோடியாகக் கூடிய வாய்ப்பு நிச்சயமாக இல்லை. அப்புறம் அவருக்கு அண்ணியாக இருந்தால் என்ன அம்மாவாக இருந்தால் என்ன? வெங்கடேஷ் ஜோடியாக நடிக்க கூப்பிட்டதுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டார். ஆக, வெங்கடேஷின் ஜோடி என்றொரு அந்தஸ்து அஞ்சலிக்கு.
இப்போது த்ரிவிக்ரம் தான் இயக்கும் புதுப் படத்திலும் அஞ்சலிக்கு ஒரு கேரக்டர் வைத்திருக்கிறார். சொந்த பூமியில் தெலுங்கில் மாட்லாடுவதில் எக்ஸ்ட்ரா சந்தோஷத்தில் இருக்கிறார் அஞ்சலியும். ஒரேயொரு குறை. சொந்தமாக வாங்கிய வீட்டில் அதிக நாள் தங்க முடியலையாம்.
Comments
Post a Comment