வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து குழந்தையுடன் திரும்பிய ஐஸ்வர்யாராய்: விமான நிலையத்தில் ரசிகர்கள் முற்றுகை!!!
Tuesday, 9th of October 2012
சென்னை::அமிதாப்பச்சனுக்கு வருகிற 11-ந்தேதி 70 வயது ஆகிறது. அவரது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட மனைவி ஜெயாபச்சன் திட்டமிட்டுள்ளார்.
மும்பையில் உள்ள திரைப்பட நகரில் இதற்கான விழா நடக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் உள்பட அனைத்து மொழிகளிலும் உள்ள சூப்பர் ஸ்டார்கள் பிறந்தநாள் விழாவுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
மத்திய மந்திரிகள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் என பலர் கலந்து கொள்கின்றனர். காலை 8.30 மணிக்கு விழா மேடையில் வந்து அமிதாப்பச்சன் வாழ்த்துக்களை பெற்றுக் கொள்கிறார். இரவு சிறப்பு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நடிகை ஐஸ்வர்யாராய் சில வாரங்களுக்கு முன் மகள் ஆரத்யாவுடன் சிக்காக்கோ சென்றார். அங்கு கணவர் அபிஷேக்பச்சன் நடிக்கும் 'டூம்3' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கு சென்று கணவருடன் தங்கினார். இடங்களையும் சுற்றி பார்த்தார்.
அமிதாப்பச்சன் பிறந்த நாள் விழா நெருங்குவதையடுத்து சிக்காக்கோவில் இருந்து குழந்தையுடன் இந்தியா திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் ஐஸ்வர்யாராயை வரவேற்க அமிதாப்பச்சன் காருடன் காத்து இருந்தார்.
ஐஸ்வர்யாராய் விமான நிலையத்தில் இருந்து இறங்கியதும் ரசிகர்கள் அவரை முற்றுகையிட்டனர். பலர் குழந்தையையும், ஐஸ்வர்யா ராயையும் செல்போனில் படம் பிடித்தார்கள். பாதுகாவலர்கள் ஐஸ்வர்யாராயை பத்திரமாக அழைத்து போய் அமிதாப்பச்சன் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Comments
Post a Comment