Thursday,11th of October 2012
மும்பை::சினிமாவில் எந்த இயக்குனரும் புதிதாக சாதிக்கவில்லை. அரைத்த மாவையே அரைக்கிறார்கள் என்றார் ராணி முகர்ஜி.
தமிழில் ‘ஹே ராம் படத்தில் கமல் ஜோடியாக நடித்தவர் பாலிவுட் ஹீரோயின் ராணி முகர்ஜி. தற்போது மலையாள நடிகர் பிருதிவிராஜ் ஜோடியாக ‘அய்யா என்ற இந்தி படத்தில் நடித்திருக்கிறார். இது பற்றி ராணி முகர்ஜி கூறியதாவது:
சினிமாவில் ஏராளமான சாதனையாளர்கள் அந்த காலத்திலிருந்தே இருக்கிறார்கள். இன்றைக்கு யாரும் புதிதாக சாதித்ததாக தெரியவில்லை. முன்பு என்ன செய்தார்களோ அதைத்தான் இப்போதுள்ள இயக்குனர்கள் செய்கிறார்கள். அரைத்த மாவைத்தான் அரைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கும் படங்கள் இப்போது நன்றாக ஓடுகிறது என்கிறார்கள்.
அந்த காலத்திலேயே மதர் இண்டியா, சுஜாதா போன்ற பாலிவுட் படங்கள் இதை சாதித்திருக்கிறது. அதுதான் இன்றைக்கு மீண்டும் நடக்கிறது. வெளிநாட்டு படங் களை காப்பியடிக்கும் சூழல் அதிகரித்துள் ளது. இதனால்தான் புதிதாக எதுவும் இந்திய சினிமாவில் நிகழவில்லை என்கிறேன். அதே நேரம், ரசிகர்களின் ரசனை மாறி இருக்கிறது. நல்ல படங்களை வரவேற்கிறார்கள். வாழ்க்கையில் வருவதையெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது.
நல்லவற்றை தேர்வு செய்ய வேண்டும். எனக்கும் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. நல்லவற்றை மட்டுமே ஏற்கிறேன். ஹீரோ படம், ஹீரோயின் படம் என்று நான் பிரித்து பார்ப்பதில்லை. ஸ்கிரிப்ட் பிடித்திருந்தால் நடிக்கிறேன். தென்னிந்திய வாலிபனும், மராட்டிய பெண்ணுக்கும் மலரும் காதல் கதையாக உருவாகி இருக்கிறது ‘அய்யா படம். இவ்வாறு ராணி முகர்ஜி கூறினார்.
Comments
Post a Comment