ஜிம்னாஸ்டிக்ஸ் பயிலும் ஹன்சிகா!!!

Wednesday,10th of October 2012
சென்னை::வாலு, சேட்டை, சிங்கம் -2 உட்பட பல படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, தன் ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக, "பேஸ்புக் மூலம், தன்னைப் பற்றிய தகவல்களை, அவர்களிடம் பகிர்ந்து கொண்டு வருகிறார். "உடல் எடையை குறைத்தால், உங்கள் அழகு இன்னும் மெருகேறும் என, சில ரசிகர்கள், "அட்வைஸ் கொடுத்ததை அடுத்து, இப்போது, உணவுக் கட்டுபாடு, "ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி என, தன் உடல்கட்டின் மேல் கவனத்தை திருப்பி இருக்கும் ஹன்சிகா, நாள் ஒன்றுக்கு, 2 முதல், 3 மணி நேரம் வரை, "ஜிம்மே கதியென்று கிடக்கிறார். அதோடு, தன் உடல் எடையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த தகவல்களையும், ரசிகர்களின் கவனத்துக்கு கொண்டு செல்கிறார் ஹன்சிகா.

Comments