Wednesday,24th of October 2012
சென்னை::நடனம் ஆட மறுத்து ஒப்புக்கொண்ட படத்திலிருந்து விலகுவதாக கூறுவது கேலிகூத்து என்றார் காஜல் அகர்வால். இது பற்றி அவர் கூறியதாவது: மீடியாக்களிலிருந்து நான் ஒதுங்கி இருப்பதாக நினைக்கிறார்கள். அது உண்மை அல்ல. இப்போதுதான் இந்தி மற்றும் தமிழ் படங்களின் ஷூட்டிங் முடித்துக்கொடுத்தேன். அடுத்து தெலுங்கில் ரவி தேஜாவுடன் ‘சார் வச்சாரு, ஜூனியர் என்டிஆருடன் ‘பாட்ஷா, ராம்சரணுடன் ‘நாயக்Õ ஆகிய படங்களில் நடிக்கிறேன். இதற்கிடையில் என்னை பற்றி வதந்தி பரப்புகிறார்கள். சமீபத்தில் மகேஷ்பாபுவுடன் நடனம் ஆட முடியாது என்று கூறியதால் என்னை படத்திலிருந்து நீக்கியதாக கூறுகிறார்கள். இது சரியான கேலிக்கூத்து. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறேன்.
வதந்தி பரப்புபவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். அது நேரத்தை வீணடிக்கும் செயல். மகேஷ்பாபு படத்திற்கு ஒட்டுமொத்தமாக கால்ஷீட் கேட்டிருந்தார்கள். மற்ற படங்களுக்கு கொடுத்திருந்த கால்ஷீட்டை மனதில் வைத்து இப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்கி இருந்தேன். ஆனால் திடீரென்று ஷூட்டிங் தேதி மாற்றிவிட்டார்கள். என்னால் தேதி ஒதுக்க முடியவில்லை. இதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? கால்ஷீட் பிரச்னை பற்றி அவர்களிடம் கூறியபோது படத்திலிருந்து விலகிக்கொள்ள அனுமதித்தார்கள். இதையடுத்து எந்த ஹீரோயினை வேண்டுமானாலும் ஒப்பந்தம் செய்ய அவர்களுக்கு உரிமை உள்ளது. இதுதான் நடந்தது. இங்கே எல்லாம் தொழில் ரீதியாகத்தான் நடக்கிறது. தற்போது அக்ஷய்குமார் நடிக்கும் இந்தி படத்தில் நடிக்கிறேன்.
Comments
Post a Comment