Wednesday,24th of October 2012
சென்னை::ஆர்யாவுடன் லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடிக்க அஞ்சலி தயக்கம் காட்டினார். இயக்குனரின் நீண்ட சமாதான முயற்சிக்கு பின்பே அக்காட்சியில் அவர் நடித்தார். இந்தியில் டெல்லி பெல்லி படத்தில் இம்ரான் கான், பூர்ணா ஜெகன்நாதன் நடித்த லிப் டு லிப் முத்தக் காட்சி இடம்பெற்றது. இந்த படத்தின் ரீமேக்தான் சேட்டை. கண்ணன் இயக்குகிறார். இதில் இம்ரான் கான் வேடத்தில் ஆர்யா, பூர்ணா வேடத்தில் அஞ்சலி நடிக்கின்றனர். இந்தி படத்தை போல் தமிழிலும் முத்தக் காட்சி இடம்பெறும் என அஞ்சலியிடம் இயக்குனர் கண்ணன் கூறவில்லையாம். அந்த காட்சி பற்றி எந்த முடிவும் செய்யவில்லை என்ற ரீதியில் பேசி அஞ்சலியின் கால்ஷீட்டை பெற்றாராம். இப்போது இப்பட ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது.
ஆர்யா, அஞ்சலி, சந்தானம், பிரேம்ஜி நடிக்கும் காட்சிகள் படமாக்கி வருகிறார்கள். ஏற்கனவே திட்டமிட்டபடி அந்த முத¢தக் காட்சியையும் மும்பையில் படமாக்க கண்ணன் முடிவு செய்தார். காட்சி படமாக்கும் நேரத்தில்தான் இது பற்றி அஞ்சலியிடம் கூறினார். அதிர்ச்சியடைந்த அஞ்சலி, இக்காட்சியில் நடிக்க தயக்கம் காட்டினாராம். இதனால் ஷூட்டிங் தடைபட்டது. படத்தில் மாடர்ன் கேர்ள் வேடத்தில் நீங்கள் நடிக்கிறீர்கள். போல்டான நிருபர் வேடம். கதைக்கு இந்த காட்சி தேவை என்பது உள்பட பல காரணங்கள் கூறி கடைசியாக அஞ்சலியை சம்மதிக்க வைத்திருக்கிறார் கண்ணன். சமாதானப்படுத்தவே அரைமணி நேரம் ஆனதாம். அதன் பின் இந்த காட்சியை படமாக்கினார்கள்.
Comments
Post a Comment