Saturday,27th of October 2012
சென்னை::ஒஸ்தி, மயக்கம் என்ன படங்களில் ஹீரோயினாக நடித்த ரிச்சா தெலுங்கில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார்.
இரண்டு இளம் நடிகர்களுடன் நடித்தும் ரிச்சாவுக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லை. வெங்கட்பிரபு கார்த்தியை வைத்து இயக்கும் பிரியாணியில் ரிச்சா நாயகி என்றனர். ஆனால் இப்போது அது பற்றி பேச்சே இல்லை. வேறு நாயகியை தேடி வருகிறார்கள். தெலுங்கிலும் வாய்ப்புகள் மந்தமான நிலையில் இரண்டாவது ஹீரோயினாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். அதே படத்தில் ரிச்சாவை கொஞ்சம் லேட்டாக கமிட் செய்துள்ளனர். ரிச்சா இரண்டாவது நாயகி என்பதை தயாரிப்பு தரப்பும் உறுதி செய்துள்ளது.
Comments
Post a Comment