Tuesday, 9th of October 2012
சென்னை::
5. சாருலதா
இந்த ஹாரர் படம் ரசிகர்களை அவ்வளவாக மிரட்டவில்லை. இரண்டு ப்ரியாமணி இருந்தும் கலெக் ஷன் கம்மி. இதுவரை சென்னையில் 66.5 லட்சங்களை வசூலித்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் 74 ஆயிரங்களை மட்டுமே வசூல் செய்துள்ளது. வார நாட்களில் பரவாயில்லை, 1.7 லட்சம் வசூல்.
4. சாட்டை
ஆஹா ஓஹோ என்று சொல்லப்பட்டாலும் ரசிர்கள் கொஞ்சம் ஆவரேஜாகதான் சாட்டையை வைத்திருக்கிறார்கள். சென்ற வார இறுதியில் 4.5 லட்சங்களும், வார நாட்களில் 8.5 லட்சங்களும் வசூலித்திருக்கும் இப்படம் சென்னையில் இதுவரை 79.1 லட்சங்களை வசூலித்துள்ளது.
3. இங்கிலீஷ் விங்கிலீஷ்
அருமையான படம், அற்புதமான நடிப்பு. ஏன் இந்தப் படத்தை தமிழர்கள் விரும்பவில்லை என்றே தெரியவில்லை. முதல் மூன்று தினங்களில் - குப்பை ஆக் ஷன் படங்கள் கோடிகளில் வசூல் செய்யும் போது இந்தப் படம் 24.4 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. அடுத்த வாரமாவது கலெக் ஷன் பிக்கப்பாகுமா?
2. சுந்தரபாண்டியன்
ஆணாதிக்கம், சாதி வெறியை காக்கிறது என்றெல்லாம் விமர்சனங்கள் இருந்தாலும் கலெக் ஷனுக்கு குறைவில்லை. சசிகுமாரின் படம் சென்ற வார இறுதியில் வசூலித்தது 41.5 லட்சங்கள். வார நாட்களில் வசூல் 52.7 லட்சங்கள். இதுவரை சென்னையில் மட்டும் 5.8 கோடிகளை வசூலித்திருக்கிறது.
1. தாண்டவம்
திருடிய கதை என்றாலும் தாண்டவம்தான் இப்போதும் நெ.1. சென்ற வார இறுதியில் வசூல் 1.1 கோடி. வார நாட்களில் 1.21 கோடி. சென்ற வார இறுதிவரை சென்னையில் வசூல் 4.2 கோடிகள்.

Comments
Post a Comment