மீண்டும் சினிமாவை கிண்டல் செய்யும் படமா? தமிழ் படம் இயக்குனர் பதில்!!!

Tuesday,2nd of October 2012
சென்னை::மீண்டும் நடிகர்களை கிண்டல் செய்து படம் இயக்குகிறீர்களா? என்றதற்கு பதில் அளித்தார் இயக்குனர் அமுதன். நடிகர்களின் கதாபாத்திரங்களை யும் சில தமிழ் படங்களையும் விமர்சித்து ‘தமிழ் படம்Õ என்ற படம் இயக்கிய சி.எஸ்.அமுதன், அடுத்து ‘ரெண்டாவது படம்Õ என்ற பெயரில் புதுபடம் இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: ஹீரோக்கள் விமல், ரிச்சர்ட், அரவிந்த் ஆகாஷ், ஹீரோயின்கள் விஜயலட்சுமி, ரம்யா நம்பீசன் ஆகியோருடன் சேத்தன், சஞ்சனா சிங், சுரேஷ், ஆர்.எஸ்.சிவாஜி, மாறன், அண்ணாச்சி என 30 பேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களின் கதைதான் Ôரெண்டாவது படம்Õ. ‘தமிழ் படம் போல் கிண்டல் இருக்குமா?Õ என்கிறார்கள். அதுபோல் கிண்டல் இதில் இருக்காது. இது காமெடி படமாக உருவாகிறது. ஆனால் முழுக்க காமெடி படம் கிடையாது.  ‘இன்றைக்கு காமெடி தானே டிரெண்ட்Õ என்கிறார்கள். டிரெண்ட் பற்றி நான் யோசிக்கவில்லை, காமெடிக்கு டிரெண்ட் கிடையாது. எந்த கால கட்டத்திலும் நகைச்சுவைக்கு வரவேற்பு குறையாது. காதல், காமெடி, ஆக்ஷன் என்று பிரித்து பார்க்கும்போதுதான் டிரெண்ட் என்ற பேச்சு வருகிறது. இப்படத்தை பொறுத்தவரை காதல், காமெடி இரண்டும் இருக்கும். விஜய் உலகநாத் ஒளிப்பதிவு. கண்ணன் இசை. தயாரிப்பு தரணி. இவ்வாறு அமுதன் கூறினார்.

Comments