31st of October 2012
சென்னை::ஓடுற குதிரை மீது பந்தயம் கட்டுற பழக்கம் தமிழ் சினிமாவில் காலங்காலமாக இருந்து வரும் நடைமுறை தான் என்றாலும், அதற்கு ரெட் ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலினும் விதிவிலக்கு அல்ல என்பது லேட்டஸ்ட் நியூஸ்!
அதாகப்பட்டது இதுநாள் வரை ஓ.கே., ஓ.கே., ராஜேஷின் இயக்கத்தில் மட்டுமே அடுத்தும் நடிப்பேன் என விரதம் இருந்து வந்த உதயநிதி, சமீபத்தில், "சுந்தரபாண்டியனின்" வெற்றி ஓட்டத்தால் அதன் இயக்குநர் பிரபாகரனின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தை தயாரித்து, அதில் ஹீரோவாக நடிக்கவும் இருக்கிறார் என்பது தான் புதிய செய்தி!
ராஜேஷ் எப்போ வர்றரது, நான் எப்போ மீண்டும் ஹீரோ ஆவது...? என்பது உதயநிதியின் ஸ்டேட்மெண்ட்டாக்கும்!!
Comments
Post a Comment