Thursday,11th of October 2012
சென்னை::தமிழில் படம் இல்லாததால் பிறமொழியில் கவனம் செலுத்துகிறார் லட்சுமிராய். இதுபற்றி அவர் கூறியதாவது: விக்ரமுடன் தாண்டவம் படத் தில் முக்கிய வேடமொன்றில் நடித்தேன். இதையடுத்து தமிழில் இப்போது எந்த படத்திலும் நடிக்கவில்லை. இதனால் மற்ற மொழியில் கவனம் செலுத்துகிறேன்.
டோலிவுட்டில் கோடி ராமகிருஷ்ணா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளேன். பெண்களை மையமாக வைத்து அவரது படங்கள் இருக்கும். அந்த வகையில் எனக்கும் அதேபோன்ற ஸ்கிரிப்ட் அமைந்திருக்கிறது. இதுபோன்ற கதாபாத்திரங்கள் நடிகைகளுக்கு கிடைப்பது மிகவும் அரிது. இதுதவிர மலையாளத்தில் மம்மூட்டியுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். கன்னடத்தில் நடித்து வந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிந்தது.
விரைவில் டோலிவுட் படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது. விரைவில் எனது சகோதரியின் திருமணம் நடக்க உள்ளது. அதற்கான வேலையில் பிஸியாக இருக்கிறேன். குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கும் வாய்ப்பு நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போதுதான் கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை நான் தவறவிடுவதாக இல்லை. இதற்கேற்ப எனது படங்களின் கால்ஷீட்டும் கொடுத்திருக்கிறேன்.
Comments
Post a Comment