யுவனை அசத்திய சுசீந்திரன்!!!

Wednesday,17th of October 2012
சென்னை::ஜுராஸிக் பார்க்கில் பிரமாண்ட டைனோசரை காண்பிக்கும் முன் அதுபற்றிய ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குவாரே ஸ்பீல்பெர்க்... அதற்கு சற்றும் குறையாத பில்டப் ஆதலால் காதல் செய்வீர் படத்துக்கு.

படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். நாளை நடக்கும் இசை வெளியீட்டில் நான்கு பாடல்களை மட்டுமே வெளியிடுகிறார்கள். சிடி-யிலும் இந்த நான்கு பாடல்கள் மட்டுமே இடம்பெறும். அப்போ மீதி இரண்டு பாடல்கள்...?

அந்தப் பாடல்களை கேட்டால் படத்தின் கதை முழுமையாக தெ‌ரிந்துவிடுமாம். அதனால் படத்தில் மட்டுமே அதனை கேட்கவோ பார்க்கவோ முடியும். தமிழ் (ஒருவேளை உலக...?) வரலாற்றில் முதல்முறையாக இப்படியொரு சிதம்பஸ்வர ரகசியம்.

பாடலை தாண்டி எதுவும் பேசாதிருக்கும் யுவன் முதல்முறையாக ஆதலால் காதல் செய்வீர் படத்தின் கிளைமாக்ஸ் பார்த்து அசந்துவிட்டதாக தெ‌ரிவித்தார். சுசீந்திரன் அசத்திவிட்டாராம்.

ராஜபாட்டைக்கும் இப்படி பலரும் சொன்னதாக ஞாபகம்.

Comments