பிரியாணி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமான ரிச்சா விலகல்: கார்த்திக்கு ஜோடியாக ஹன்சிகா ஒப்பந்தமாகியுள்ளார்!
Monday,29th of October 2012
சென்னை::வெங்கட் பிரபு இயக்கும் பிரியாணி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஹன்சிகா ஒப்பந்தமாகியுள்ளார் என்று செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தோம்.
இந்த அதிர்ச்சிக்குக் காரணம், ஏற்கனவே பிரியாணி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானவர் ரிச்சா. ஏன் இந்த மாற்றம் என்று தெரியாமல் குழம்பி இரு தரப்பையும் தொடர்பு கொள்ள முயன்றும் முயற்சி பலனளிக்கவில்லை.
உடனே ஒரு முடிவுக்கு வந்து இணையதளத்தில் வலைவீசி தேடியதில், ரிச்சா தனது இணையப் பக்கத்தில் பிரியாணியில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
அதாவது, பிரியாணி படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதால், எனது கதாப்பாத்திரத்தின் அழுத்தம் குறைந்துவிட்டது. இதனால்தான் இந்த படத்தில் இருந்து நான் வெளியேறிவிட்டேன். இதனை இயக்குநர் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
நிச்சயமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு எதிர்காலத்தில் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.
Comments
Post a Comment