Tuesday,30th of October 2012
சென்னை::தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை திருப்தி அளிக்கும் விதத்தில் பெய்கிறதோ இல்லையோ! நடிகை அமலா பாலுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அவருக்கு ஏகப்பட்ட திருப்தியை அளிக்கும் விதத்தில் உள்ளது. தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேரும் அமலா, தற்போது விஜய்க்கு ஜோடியாகியிருக்கிறார்.
ஆம், இயக்குநர் விஜய், விஜயை வைத்து இயக்கும் புது படத்தில் விஜய்க்கு ஜோடி அமலா பால் தான். இதை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.
அமலா பாலுக்கும், இயக்குநர் விஜய்க்கும் லவ்வோ லவ்வு என்று கிசுகிசுத்த கோடம்பாம், சில நாட்களாக அதே இரண்டு பேருக்கும் சண்டையோ சண்டை என்று கிசுகிசுத்தார்கள். தற்போது எங்களுக்கு சண்டை ஒன்றும் இல்லை என்பதை வெறும் வார்த்தைகளால் மட்டும் இல்லாமல், தனது புதிய படத்திற்கு ஹீரோயினாக்கி இயக்குநர் விஜய் செயலிலும் காட்டிவிட்டார்...
சந்திரபிரகாஷ் ஜெயின் வழங்கும் மிஷ்ரி புரொடக்ஷன்ஸுக்கார இந்த புதிய படத்தை அவர் உருவாக்குகிறார்.
சத்யராஜ் நடித்த ரிக்ஷா மாமா, ராமராஜன் நடித்த பாட்டுக்கு நான் அடிமை, டி. ராஜேந்தரின் ஒரு வசந்த கீதம் ஆகிய படங்களைத் தயாரித்தவர்தான் இந்த சந்திரபிரகாஷ் ஜெயின். கரகாட்டக்காரன், சின்னத்தம்பி, காஞ்சனா, கோவா, கோச்சடையான் உள்ளிட்ட 200க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு பைனான்ஸ் செய்தவர் இவர்.
சத்யராஜுக்கு ரொம்ப நெருக்கமான தயாரிப்பாளர் இவர். அதனால்தானோ என்னமோ, தான் இப்போது தயாரிக்கும் புதிய படத்திலும் சத்யராஜுக்கு முக்கிய வேடம் அளித்துள்ளார்.
படத்தின் கதாநாயகியாக அமலா பால் நடிக்கிறார். விஜய் ஜோடியாக அமலா பால் நடிப்பது இதுதான் முதல்முறை. அதுபோல நடிகர் விஜய்யும் இயக்குநர் விஜய்யும் கைகோர்ப்பதும் இதுவே முதல்முறை. அட, ஜீவி பிரகாஷ் குமார் விஜய் படத்துக்கு முதல்முறையாக இசையமைப்பதும் இந்தப்படத்தில்தான்.
மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. குடும்பத்தோடு பார்க்கும் வண்ணம் முழுநீள பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகிறது இந்தப்படம். முதலில் தலைவன் என்று இந்தப் படத்துக்கு பெயர் சூட்டியிருந்தனர். ஆனால் அந்தத் தலைப்பு வேறு ஒருவர் பதிவு செய்திருப்பதால், வேறு தலைப்பை தேடி வருகின்றனர்.
அமலா பாலுக்கும், இயக்குநர் விஜய்க்கும் சண்டை இல்லை என்பது ஓகே, அப்போ!
Comments
Post a Comment