கரண் படத்தில் நடிக்கும் பத்து முன்னணி நடிகர்கள்!!!

Saturday,13th of October 2012
சென்னை::கரண்,அஞ்சலி நடித்த 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தை இயக்கிய வி.சி.வடிவுடையான், சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.'சிங்கம் சினிமா' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் மூலம் அவர் தயாரித்து இயக்கும் படத்திற்கு 'சொக்கநாதன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் மூலம் கரணுடன் மீண்டும் கைகோர்த்திருக்கும் வடிவுடையான், இப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளிகளில் தயாரிக்கிறார். மேலும் இப்படத்தில் கரணுடன் பத்து முன்னணி ஹீரோக்களும் நடிக்கிறார்களாம். அதுமட்டும் இன்றி இதில் ஹீரோயினாக நடிக்க கரினா கபூர் மற்றும் வித்யா பாலனுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்களாம்.

சசிகுமார், லிங்குசாமி, பிரபு சாலமன், எழில், பாண்டிராஜ் உள்ளிட்ட இயக்குநர்களாக இருந்து தயாரிப்பாளர்களாகி வெற்றி பெற்றிருக்கும் இயக்குநர்களின் பட்டியலில் புதிதாக இடம்பிடித்திருக்கும் வி.சி.வடிவுடையான், இயக்கிய 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படம் 'டான் சுந்தரம்' என்ற தலைப்பில் தெலுங்கில் டப்பிங் செய்து அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.

Comments