Wednesday, 3rd of October 2012
சென்னை::பாலிவுட்டுக்கு கோலிவுட்காரங்க போனதுல ஒரு நன்மை ஏற்பட்டிருக்காம்... இருக்காம்... அங்க பெரிய படங்கள¢ல பல ஹீரோக்கள் சேந்து நடிக்கற விஷயத்த டீப்பா ஆராய்ஞ்சி பாத்தாங்களாம். அதுல நெறய பிளஸ் இருக்கறது தெரிஞ்சதாம். பிளாப்னா பழி வராது, ஹிட்டானா பேமென்ட் டபுளாகும், ஒரு படத்துல டபுள் ஹீரோயினோட வேல செய்யுற சான்ஸ் அப்படி இப்படின்னு நெறய பிளஸ் இருக்கு. அத பத்தி சமீபத்தில பார்ட்டில சந்திச்சிட்ட ஐ காட், ஸ்டண்ட் கோழி, கோ ஹீரோவும், ஜெயம் நடிகரும் பேசிகிட்டாங்களாம். இனிமேல டபுள் ஹீரோ மட்டுமில்லாம டிரிபிள் ஹீரோ ஸ்கிரிப்ட் இருந்தாலும் சேந்து நடிக்க முடிவு பண்ணிருக்காங்களாம்... இருக்காங்களாம்...
வேத படம் உள்ளிட்ட கோலிவுட் படங்கள்ல நடிச்ச திவ்யமான உன்னி திடீர்னு மேரேஜ் பண்ணிட்டு ஹஸ்பண்டோட பாரின்ல செட்டிலாயிட்டாராம்... செட்டிலாயிட்டாராம்... குடும்ப வாழ்க்க புளிச்சதயடுத்து மறுபடியும் பீல்டுக்கு ரிட்டன் ஆயிட்டாராம். மல்லுவுட்ல ஏற்கனவே நெறய படங்கள நடிச்சிருக்க¤றதால ரீஎன்ட்ரிய அங்கிருந்தே ஆரம்பிக்க¤றாராம். கோலிவுட் படங்கள வசியம் பண்றதுக்கு மேனேஜரே தேடிகிட்டிருக்காராம்.. இருக்காராம்...
சு.புரம் ஜெய ஹீரோ குஷில இருக்காராம்... இருக்காராம்... புது படம் கமிட் ஆயிருக்கான்னு கேட்டா இல்லேன்னு தலையாட்டுறாரு. இந்த குஷிக்கு வேற காரணமாம். தோண்டி துருவி விசாரிச்சப்ப புதுபடத்துல நயன ஹீரோயினோட ஜோடி சேந்ததுக்கு தான் இந்த ஆர்ப்பாட்டமாம். அவரோட எப்போ டூயட் பாடப்போறோம்ன்ற ஆசைல கனவுலகத்துல மூழ்கி கிடக்காராம்... இருக்காராம்...
பாலிவுட்ல தாதாக்கள் மிரட்டல் இருக்க¤றதால அங்குள்ள ஹீரோக்கள் தனியார் செக்யூரிட்டி வச்சிருக்காங்க. ஆனா கோலிவுட்ல அப்படி எந்த மிரட்டலும் இல்லே. ஆனா, செவன்த் சென்ஸ் ஹீரோ தனக்கு செக்யூரிட்டிகளை நியமிச்சிருக்காராம்... நியமிச்சிருக்காராம்... எங்காவது போனா நடிகர ரவுண்டு கட்டி கூட்டிட்டு போற செக்யூரிட்டிங்க சைட்ல யார் இருந்தாலும் கண்டுக்காம இடிச்சிட்டு போறாங்களாம். Ôஉச்ச நடிகருக்கே இந்த மாதிரி செக்யூரிட்டி கிடையாது. செவன்த் சென்ஸ் நடிகரோட அலம்பல் தாங்க முடியலேÕன்னு கோடம்பாக்கத்துல பேசிக்கிறாங்க... பேசிக்கிறாங்க...
ரிச்சான நடிகைகிட்ட நடிப்பு திறமை இருந்தும் ஜொலிக்காம போனதுக்கு காரணம், கோபம்தானாம். அடிக்கடி கோபத்துல அசிஸ்டென்ட்ஸ், டெக்னீஷியன்களை கடிந்துக்கிறாராம். ஷாட் ரெடின்னு சொன்னாலும் நேரத்துக்கு கேமரா முன்னாடி வர்றதில்லையாம்... வர்றதில்லையாம்... சம்பள விஷயத்துலேயும் கறாரா நடந்துக்கிறாராம். இதனால நடிகையை படத்துக்கு புக் பண்ணவே இயக்குனருங்க தயங்குறாங்களாம்... தயங்குறாங்களாம்...
விஜயான ஆதி நடிகரு படங்கள்ல வாய்ப்பில்லாம சீரியல்ல நடிக்க போனாரு. மறுபடியும் சினிமாவுக்கு வந்தா இயக்குனராத்தான் வர்றதுன்ற கனவு பலிச்சிருக்காம். சகநண்பரின் நிஜ கதையை ‘புக்Õகுங்கிற பேர்ல இயக்குற நடிகரு, பட அலுவலகம் அமைக்கறதுக்காக சொந்த வீட்டை காலி பண்ணிட்டாராம். டிஸ்கஷன், ஸ்கிரிப்ட் பணின்னு எல்லா வேலயும் இப்ப இந்த வீட்லதான் நடக்குதாம். மனைவியோட குடித்தனம் நடத்த வேற வீட்டுக்கு குடியேறிட்டாராம்... குடியேறிட்டாராம்...
சந்தன காமெடி ஆக்டர் புதுசா கண்டிஷன் போடுறாராம்... போடுறாராம்... நாளொன்றுக்கு 50 லகரம் கொடுக்கணும், குறைஞ்சது 6 டூ 10 நாளைக்கு கால்ஷீட் வாங்கிக்கணும்னு தயாரிப்புங்ககிட்ட சொல்றாராம். இதை கேட்டு தயாரிப்புங்க இடி விழுந்த மாதிரி ஷாக் ஆயிட்டாங்களாம்... ஆயிட்டாங்களாம்... ‘ரேட்டை ஏத்துன நடிகரு டேட்டையும் ஏத்துனா எப்படி கட்டுப்படியாகும்Õனு புலம்புறாங்களாம். ரெண்டு நாளு, மூணு நாளுக்கு மட்டும் கால்ஷீட் தாங்கன்னு கேட்டா அதுக்கு வேற ஆளுங்க இருக்காங்க அங்க போங்கன்னு நடிகர் ஜூட் விடுறாராம்... விடுறாராம்...
கெட்டிமேளம் சத்தம் கேட்ட மறுநாளே இண்டஸ்ட்ரிக்கு முழுக்கு போடுற ஹீரோயின்களுக்கு மத்தில சுவேதமான நடிகை வித்தியாசம் காட்டியிருக்காராம். கெட்டி மேளம் கொட்டி, கர்ப்பிணியான பிறகு பிரசவ காட்சில நடிச்சி அசத்தினவரு, அதுக்கு முன்பே கர்ப்பணியா எப்படி நாட்களை கழிக்கிறாருன்ற சீன்கள்லேயும் நடிச்சாராம். ‘இப்படியெல்லாம் கூடவா நடிப்பாங்கனு கேட்டவங்களுக்கு, ‘இதுல என்ன தப்புÕன்னு நடிகை பதிலுக்கு கேட்கிறாராம்... கேட்கிறாராம்...
வயசு எகிறிட்டே போறதால கோலிவுட்லயிருந்த பல நடிகைங்க பாலிவுட்டுக்கு போறங்கன்னு லட்சுமிகர ஹீரோயின் சொல்றாராம்... சொல்றாராம்... ‘நீங்க எப்ப போகப்போறீங்கÕனு கேட்டா, ‘நான் இண்டஸ்ட்க்கு அறிமுகமானப்போ வயசு பதிமூணுதான். அதனால பாலிவுட்டுக்கு போற அவசரம் எனக்கில்ல. இன்னும் கொஞ்ச காலம் சவுத்லேயே நடிச்சிட்டு பிறகு அந்த பக்கம் போவேன்னு உஷாரா விளக்கம் தர்றாரு... தர்றாரு...
Comments
Post a Comment