நாக்குமுக்க பாணியில் பாடல் வேண்டும்! - அடம்பிடித்த நகுல்!!!

Wednesday,31st of October 2012
சென்னை::காதலில் விழுந்தேன் படத்தில் இடம்பெற்ற நாக்குமுக்க பாடல் பெரிய அளவில் ஹிட்டானதோடு, நகுலையும் வெளிச்சம் போட்டு காட்டியது. அதனால இப்போது தான் நடித்து வரும் நான் ராஜாவாகப்போறேன் படத்திலும் அதே பாணியில் ஒரு பாடல் வேண்டும் என்று டைரக்டரை ப்ருத்வி ராஜ்குமாரை நச்சரித்து கேட்டு வாங்கியிருக்கிறாராம் நகுல்.

அதனால் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷிடம் அந்த பாணியில் ஒரு டியூன் கேட்டு வாங்கிய இயக்குனர், பாடலாசிரியர் அண்ணாமலையை வைத்து மல்கோவா, பால்கோவா என்றொரு பாடலை எழுத வைத்திருக்கிறார். இந்த பாடலில் நகுலுடன் ஷெரீன்கான் என்றொரு இந்தி நடிகையை குத்தாட்டம் ஆடி வைத்திருக்கிறார்கள். தனது பேவரிட் டியூன் என்பதால், இந்த பாடலுக்கு கூடுதல் சிரத்தை எடுத்து ஷெரீன் கானுடன் இணைந்து நறுக் ஆட்டம் ஆடியிருக்கிறாராம் நகுல்

Comments