Saturday, 6th of October 2012
சென்னை::நடிப்பு பயிற்சி பள்ளிகள்போல் தரமான தொழில்நுட்ப பயிற்சி பள்ளி ஒன்றை அமைக்க உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழில் 1964ம் ஆண்டு ‘பொம்மை’ படத்தில் தான் பாடிய முதல் தமிழ் பாடலான ‘நீயும் பொம்மை நானும் பொம்மை..’ பாடலை திரையுலகில் 50 வருடத்தில் அடியெடுத்து வைக்கும் கே.ஜே.ஜேசுதாஸ் ‘மூடர் கூடம்’ என்ற படத்துக்காக சமீபத்தில் மீண்டும் பாடினார்.
சிறுத்தை சிவா இயக்கும் அஜீத் படத்தில் சிம்பு கெஸ்ட்ரோலில் நடிப்பதுபற்றி இன்னும் முடிவாகவில்லை என்றார் இயக்குனர்.
கடம் வித்வான் விக்கு வினாயக்ராம் மகன் இசை அமைப்பாளர் செல்வகணேஷ் ‘போதை’ என்ற பெயரில் குறும்படம் இயக்கி இருக்கிறார். இதில் முக்கிய வேடத்தில் ‘பேராண்மை’ சரண்யா நடித்துள்ளார். திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் படத்தை வெளியிட்டார். இப்படம் சர்வதேச பட விழாவுக்கு செல்ல உள்ளதாக செல்வகணேஷ் கூறினார்.
ஹாலிவுட் மல்யுத்த வீரர் நாதன் ஜோன்ஸுடன் ‘பூலோகம்’ படத்திற்காக சண்டை காட்சியில் நடிக்க உள்ளார் ஜெயம் ரவி.
நந்தா நந்திதா உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கும் மேக்னா ராஜ் இதுவரை சொந்த குரலில் டப்பிங் பேசியதில்லை. தற்போது மலையாளத்தில் நடித்து வரும் ‘பாப்பின்ஸ்Õ படத்துக்கு முதன்முறையாக டப்பிங் பேசுகிறார். இதில் தமிழ் பேசும் பெண்ணாக நடிக்கிறார்.
மொழி தெரியாத படங்களில் நடிக்கும்போதும் தான் பேசுவதில் தவறான அர்த்தம் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் காஜல் அகர் வால், தனது வசனம் ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் கேட்டு தெரிந்தபிறகே பேசுகிறாராம்.
புது இயக்குனர் செல்வகுமார் இயக்கும் ‘ஒன்பதுல குருÕ படத்தில் வினய் ஜோடியாக நடிக்க உள்ளார் ஸ்ரேயா.
வாகை சூட வா பட ஹீரோயின் இனியாவுடன் அவரது தாயார் ஷூட்டிங்கின்போது துணைக்கு வந்துகொண்டிருந்தார். அவருக்கு உடல் நலமில்லாமல் போனதால் இப்போது இனியாவுடன் அவரது தந்தை துணைக்கு வருகிறாராம்.
பட வாய்ப்பு இல்லாததால் இந்தியில் சக்ரவியூ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார் சமீரா ரெட்டி.
அஜீத் நடிக்க ‘சிறுத்தைÕ சிவா இயக்கும் படத்துக்கு ‘வெற்றி கொண்டான்‘ என்று தலைப்பு வைக்கப்படுகிறதாம். ஆனால் டைட்டில் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் இயக்குனர்.
நான் படத்தில் சலீம் என்ற கேரக்டர் மூலம் நடிகராக அறிமுகமான இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி தான் நடிக்கும் அடுத்த படத்துக்கு ‘சலீம்Õ என டைட்டில் வைத்திருக்கிறார். இதுதவிர ‘திருடன்Õ என்ற படத்திலும் நடிக்கிறார்.
நான் ஈ பட இயக்குனர் ராஜ மவுலி இயக்கும் படத்தில் நடிப்பதற்காக தனது திருமணத்தை தள்ளி வைத்திருக்கிறார் டோலிவுட் ஹீரோ பிரபாஸ்.
சிவாஜி, ஒய்.ஜி.மகேந்திரன் நடித்த ‘பரீட்சைக்கு நேரமாச்சுÕ படம் மீண்டும் ரீமேக் ஆகிறது. சிவாஜி நடித்த வேடத்தில் ஒய்.ஜி.மகேந்திரனும், ஒய்.ஜி.மகேந்திரன் நடித்த வேடத்தில் சந்தானமும் நடிக்கின்றனர்.
மறைந்த நடிகர் திலகன், கடைசியாக ‘அன்னும் இன்னும் என்னும்Õ என்ற மலையாள படத்தில் நடித்தார். விரைவில் வெளிவரவுள்ள இப்படத்தில் அவர் காமெடி வேடத்தில் நடித்திருக்கிறார்.
Comments
Post a Comment