இலியானா வாய்ப்பை பறித்த சமந்தா!!!

Thursday,4th of October 2012
சென்னை::இலியானா நடிக்க இருந்த படத்தில் தற்போது சமந்தா நடிக்கிறார். ‘பாணா காத்தாடி, ‘நான் ஈ பட ஹீரோயின் சமந்தாவுக்கு திடீரென்று தோல் அலர்ஜி ஏற்பட்டதால் மணிரத்னம், ஷங்கர் படங்களில் நடிக்காமல் விலகினார். அந்த வாய்ப்பு வேறு நடிகைகளுக்கு சென்றது. சிகிச்சைக்கு பிறகு தற்போது சமந்தா நடிக்க வந்துவிட்டார். இந்நிலையில் இலியானா நடிக்கும் பட வாய்ப்பு ஒன்று சமந்தாவை தேடிச் சென்றிருக்கிறது. டோலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் நடித்த இலியானா திடீரென்று பாலிவுட்டில் நடிக்கச் சென்றார். முன்னதாக டோலிவுட்டில் பவன் கல்யாண் நடிக்கும் படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதற்கான ஷூட்டிங்கில் இம்மாதம் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அவர் திடீரென்று படத்தில் நடிக்காமல் விலகி விட்டார். முதலில் இதை மறுத்த அவரது மேனேஜர், தற்போது அதை உறுதி செய்திருக்கிறார். ‘த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் ஜோடியாக நடிக்க இருந்த டோலிவுட் படத்தில் இலியானா நடிக்கவில்லை. கால்ஷீட் பிரச்னை இருப்பதால் அப்படத்திலிருந்து விலகி விட்டார். ஆனாலும் தெலுங்கு படங்களில் நடிப்பதற்காக ஸ்கிரிப்ட் கேட்டு வருகிறார். இதற்கிடையில் ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் ஷாஹித் கபூர் ஜோடியாக இந்தி படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்Õ என்றார்.
இந்தியில் இலியானா நடித்த ‘பர்பிÕ படம் சமீபத்தில் வெளியாகி ஹிட்டானது. இதையடுத்து டோலிவுட் படங்களுக்கு முழுக்கு போட்டுவிட்டு இனி பாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்தப்போவதாக கடந்த மாதம் இலியானா மும்பை பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments