Monday,22nd of October 2012
சென்னை::நயன்தாராவும், ஆர்யாவும் திடீர் நெருக்கமாகியுள்ளனர். இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசு பரவியுள்ளது. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். முதலில் அவருடன் நடிக்க நயன்தாரா மறுத்தார். இயக்குனர், மானேஜர்களை அனுப்பி பேச வைத்து தன்னுடன் நடிக்க சம்மதிக்க வைத்தார்.
படப்பிடிப்பில் ஆர்யாவின் கலகலப்பான பேச்சும், நடத்தைகளும் நயன்தாராவுக்கு பிடித்தது. இருவரும் நட்பாகி விட்டனர். அதன் பிறகு பிரபுதேவாவுடன் திருமண ஏற்பாடு நடந்ததால் சினிமாவை விட்டு ஒதுங்கினார். இருவர் நட்பிலும் தடங்கள் ஏற்பட்டது. நீண்ட நாட்கள் பேசாமல் இருந்தனர். ஆனால் பிரபுதேவாவுடனான காதல் முறிந்து மீண்டும் நயன்தாரா நடிக்க வந்ததால் ஆர்யாவுடனான நட்பு புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
நாளடைவில் அந்த நட்பு இறுக்கமாகி காதலாக உருமாறியுள்ளது. சமீபத்தில் சென்னையில் 2500 சதுர அடியில் ஆர்யா வீடு கட்டி குடியேறினார். அதன் கிரகப்பிரவேச விழாவில் நயன்தாராவை சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவித்தார். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் 'கேக்' வெட்டவும் வைத்தார்.
விஷ்ணுவர்த்தன் இயக்கும் புதுப்படத்தில் அஜீத், ஆர்யா, நயன்தாரா மூவரும் இணைந்து நடிக்கின்றனர். வேறு பட வேலைகளில் இருந்தாலும் இந்த படத்தில் நயன்தாரா நடிப்பதை பார்க்க அடிக்கடி படப்பிடிப்பு அரங்குக்கு வந்து விடுகிறாராம்.
மேக்கப் அறையில் நயன்தாராவும், ஆர்யாவும் பல மணி நேரம் கதவை அடைத்து பேசிக்கொண்டிருப்பதாக படக்குழுவினர் முணுமுணுக்கின்றனர். பிறகு இருவரும் நன்றாக மதிய உணவு சாப்பிடுகின்றனர். நயன்தாராவுக்கு புதுப்படங்களில் நடிக்க சிபாரிசும் செய்கிறாராம்.
முருகதாஸ் தயாரிக்கும் படமொன்றில் ஏற்கனவே ஒப்பந்தமான பிரியா ஆனந்தை நீக்க வைத்து நயன்தாராவை சேர்த்து விட்டாராம். இது குறித்து ஆர்யாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
நயன்தாராவையும், என்னையும் இணைத்து வரும் வதந்திகளுக்கு பதில் சொல்லி சோர்ந்து விட்டேன். எனது வீட்டுக்கிரகப்பிரவேசத்துக்கு அவரை அழைத்ததில் இருந்து இந்த கிசகிசுக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
சக நடிகை என்ற முறையில் தான் நயன்தாராவை அழைத்து இருந்தேன். அதில் திரிஷாவும் கலந்து கொண்டார். விஷ்ணுவர்த்தன் படத்தில் நயன்தாராவுடன் நான்கு நாட்கள் தான் சூட்டிங் இருந்தது.
இந்த நிலையில் அவருக்காக படப்பிடிப்பு அரங்கில் காத்து இருந்தேன். மேக்கப் அறையில் சந்தித்தோம், ஒன்றாக உணவு சாப்பிட்டோம் என்பது எப்படி சாத்தியம் ஆகும். கதாநாயகி அறை முன்பு செல்வது இயக்குனர்கள் தான். நயன்தாராவுக்கு யாரிடமும் நான் சிபாரிசு செய்யவில்லை.
இவ்வாறு ஆர்யா கூறினார்.
Comments
Post a Comment