Friday,26th of October 2012
சென்னை::யார் என்ன கிசுகிசு எழுதினாலும் ஐ டோண்ட் மைண்ட் என்று ரிலாக்சாக திரியும் பாஸ் நடிகர் தாரா விஷயத்தில் பெயிலாகி நோ பீஸ் ஆஃப் மைண்ட் என்று பொங்கிக் கொண்டிருக்கிறார். என்ன விவகாரம்?
பாஸின் டைம்பாஸ் பேச்சு தாராவின் லவ் பெயிலியர் மைண்டுக்கு ரொம்ப ரிலாக்சாக இருப்பதாகவும், இருவரும் அடிக்கடி மீட் பண்ணி காயத்துக்கு களிம்பு தடவி வருவதாகவும் ஒரு எக்ஸ்ரே நிருபர் எழுதிவிட்டார்.
அதிலிருந்துதான் இந்த அக்கப்போர். இதுவரை எவ்வளவோ எழுதியிருக்கிறோம், அதுக்கெல்லாம் குளத்தில் போட்ட கல்லாக இருந்தவர் தாரா விஷயத்தில் மட்டும் தரையில் போட்ட மீனாட்டம் எகிறி குதிப்பது ஏன் என்பது எழுதியவர்களின் கேள்வி.
கேள்வி கேட்டதுடன் நிற்காமல், இதுல உண்மை இருக்கு அதுதான் பாஸ் பாஸ்பரஸ் எரியுறார் என்று கொசுறு செய்திவேறு தந்திருக்கிறார்கள். பாஸ் நடிகர் இப்போது நடிகர் திலகம் ஸ்டைலில் நோ பீஸ் ஆஃப் மைண்ட் என்று தலையை பிடித்துக் கொண்டிருப்பதாக கேள்வி.
Comments
Post a Comment