Thursday,25th of October 2012
சென்னை::தென்னிந்திய படங்களை விட்டு போகமாட்டேன் என்றார் தமன்னா. அவர் கூறியதாவது: ஹிம்மத்வாலா படம் எனது பாலிவுட் ரீ என்ட்ரி. இந்தியை பொருத்தவரை வருடத்துக்கு 2 படங்களுக்கு மேல் என்னால் நடிக்க முடியாது என்று எண்ணுகிறேன். இந்திக்கு செல்வதால் தென்னிந்திய படங்களுக்கு முழுக்குபோட்டுவிடுவேன் என்று அர்த்தம் கிடையாது, அப்படி நினைத்துக்கூட பார்த்ததில்லை.
இன்றைக்கு இந்த நிலைக்கு உயர்ந்திருக்க காரணம் தென்னிந்திய படங்கள்தான். தென்னிந்திய மொழிகளையும் நான் பேச கற்று வைத்திருக்கிறேன். இதனால் என் வேடங்களுக்கு நானே டப்பிங் பேசவும் தொடங்கி இருக்கிறேன். நான் பேசும் ஆங்கிலம் கூட தென்னிந்திய வாடையில்தான் இருக்கிறது. இந்தியில் நடிக்கிறேனென்றால் தென்னிந்திய படங்களில் கிடைக்கும் இடைவெளியாகவே இருக்கும். இவ்வாறு தமன்னா கூறினார்.
Comments
Post a Comment