என்னைப்பார்த்து ஆன்ட்டி என்பதா? ரம்யா நம்பீசன் ஆவேசம்!!!

Thursday,25th of October 2012
சென்னை::ராமன்தேசிய சீதை, குள்ளநரிக்கூட்டம் உள்பல சில படங்களில் நடித்தவர் ரம்யா நம்பீசன். மலையாள நடிகையான இவருக்கு தமிழில் எதிர்பார்த்தபடி படவாய்ப்புகள் இல்லை. அதனால் மலையாள படங்களில் நடித்து வந்தவர், இனிமேல் மற்ற மொழிகளில் படம் கிடைப்பது அரிது என்று நினைத்து கட்டுக்கோப்பாக வைத்திருந்த தனது உடல்கட்டை கவனிக்காமல் விட்டு விட்டார். அதனால் உடலில் சதை போட்டு பூதாகரமாக பெருத்து போய் இருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் பீட்சா படத்தில் நடித்திருக்கும் அவர், இதே சூட்டோடு மேலும் சில படங்களை கைப்பற்றி விட வேண்டும் என்பதற்காக, கோலிவுட்டில் டேரா போட்டு முயற்சி எடுத்து வருகிறார். ஆனால் ஒரு டைரக்டரிடம் அவர் சான்ஸ் கேட்டு சென்றபோது, இப்போது உனது உடல்கட்டு ஆன்ட்டி மாதிரி இருக்கிறது. அதனால் கதாநாயகி வேடம் தர முடியாது. வேண்டுமானால் உனக்கு பொருத்தமான ஒரு ஆன்ட்டி வேடம் தருகிறேன் என்று நேரடியாகவே ரம்யாவிடம் சொல்லி விட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை, இப்பத்தான் நான் இருபது வயதை தொட்டிருக்கிறேன். என்னைப்போய் ஆன்ட்டி என்கிறீர்களே? என்று அந்த இயக்குனரிடம் வார்த்தைகளால் ஆவேசமாக மோதிவிட்டு வெளியேறியவர், ராவோடு ராவாக கேரளத்துக்கு ஓட்டம் பிடித்து விட்டராம் ரம்யா நம்பீசன்.

Comments