Friday,26th of October 2012
சென்னை::புதிய படத்தில் விலைமாது வேடம் ஏற்றிருக்கிறார் திவ்யா. இதுபற்றி அவர் கூறியதாவது: இயக்குனர் விஜய் பிரசாத் சமீபத்தில் ‘நிர் தோஸ்’ என்ற கன்னட படத்தின் ஸ்கிரிப்ட் சொன்னார். இதில் நான் நடிக்கிறேனா, இல்லையா என்பதுபற்றி பல்வேறு கிசுகிசுக்கள் வந்துவிட்டன. இப்படத்தில் விலைமாது வேடம் என்பதால் இந்த கிசுகிசு பரவியது. ஏற்கனவே பிரசாத் இயக்கிய ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். இப்படத்தின் ஸ்கிரிப்ட் சொன்னபோதே அதிலிருந்து வேறுபாடு தெரிந்தது. நடிக்க முடிவு செய்தேன். இது வாழ்க்கையின் ஒரு பகுதியை விளக்கும் கதை மட்டுமல்ல நிறைய மெசேஜ் உள்ளது.
எத்தனை நாளைக்குத்தான் நடித்த வேடங்களையே மீண்டும் ஏற்று நடிப்பது. எனது நடிப்பில் வித்தியாசம் காட்ட வேண்டிய அவசியம் உள்ளது. இதை இயக்குனர்களும் எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் இந்த வேடத்தில் நடிக்கிறேன். கமர்ஷியல் படங்களில் தொடர்ந்து நடித்தாலும் அதில் ஏற்கும் வேடங்கள் மாறுபட்டதாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறேன். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘தில் கா ராஜா’ பட ஷூட்டிங் முடிந்தவுடன் விடுமுறைக்காக வெளிநாடு செல்கிறேன். திரும்பி வந்ததும் ஜனவரி மாதம் முதல் ‘நிர் தோஸ்’ பட ஷூட்டிங்கில் பங்கேற்கிறேன்.

Comments
Post a Comment