சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்!!!

Wednesday,24th of October 2012
சென்னை::

5. தாண்டவம்

நான்கு வாரங்கள் முடிவில் தாண்டவம் சென்னையில் 4.7 கோடிகளை வசூலித்துள்ளது. சுந்தரபாண்டியன் வசூலைவிட இது இரண்டு கோடிகள் குறைவு. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 1.7 லட்சங்கள். வார நாட்களில் வசூல் 3.4 லட்சங்கள்.


4. திருத்தணி

சென்ற வாரம் வெளியான இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் 3.9 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. பேரரசு, பரத் கூட்டணிக்கு விழுந்த பலத்த அடி திருத்தணி.


3. இங்கிலீஷ் விங்கிலீஷ்

ஸ்ரீதேவியின் படம் சென்ற வார இறுதியில் 4.6 லட்சங்களையும், வார நாட்களில் 6 லட்சங்களையும் வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 67 லட்சங்கள்.

2. பீட்சா

விமர்சகர்களின் ஒட்டுமொத்தப் பாராட்டைப் பெற்ற இப்படம் சென்ற வார இறுதியில் - அதாவது வெளியான மூன்று தினங்களில் 28 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. படத்தைப் பற்றிய நேர்மறை விமர்சனங்கள் வசூலை அதிக‌ரிக்கும் என நம்பலாம்.


1. மாற்றான்

படம் சுமார் என்ற போதிலும் வசூலில் பழுதில்லை. சென்ற வார இறுதியில் 1.2 கோடியையும், வார நாட்களில் 1.4 கோடியையும் வசூலித்துள்ள மாற்றான் இதுவரை சென்னையில் மட்டும் 4.9 கோடிகளை வசூலித்து முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

Comments