கனடாவில் புலி காடையர்களின் அடாவடித்தனம்:கனடா நாட்டில் இளையராஜாவை எதிர்த்து போராட்டம்: விடுதலைப்புலிகள் மாவீரர் தினத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதா?!
Friday,5th of October 2012
டோரான்டோ::கனடாவில் நவம்பர் 3-ந்தேதி இளைய ராஜாவின் இசை கச்சேரி நடக்கிறது. இதில் முன்னணி பாடகர்கள் பங்கேற்று திரையிசைப் பாடல்களை பாட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கனடாவில் உள்ள தமிழர் அமைப்பு செய்து வருகிறது.
இந்த நிகழ்ச்சி நிரல் பற்றி அதிகாரபூர்வமாக பத்திரிகையாளர்களிடம் அறிவிப்பதற்காக இளைய ராஜா கனடா சென்றார்.
டோரான்டோ நகரில் பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இளையராஜா இன்று பகல் 11 மணிக்கு அங்கு சென்ற போது புலி ஆதரவு காடையர்ககளும் புலி ஆதரவு தமிழர்களும் (சீமானின் புலி ஆதரவு காடையர்ககளும்) நாம் தமிழர் கட்சியினரும்) நூற்றுக்கணக்கில் திரண்டு இளையராஜாவை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
நவம்பர் மாதம் புலிகளின் மாவீரர் தினமாக கடை பிடிக்கப்படுகிறது. அந்த மாதம் முழுவதும் மகிழச்சியான நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படுவது இல்லை. எனவே இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என புலி ஆதரவு காடையர்கள் கோஷம் போட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Comments
Post a Comment